உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போராட்டத்தின் பின்னணியில் சீனா; நிபுணர்கள் திட்டவட்டம்

போராட்டத்தின் பின்னணியில் சீனா; நிபுணர்கள் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

டில்லியில் நடந்து வரும் போராட்டத்தை உற்று நோக்கி வரும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறியதாவது: மத்திய அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம், 'நீட்' வினாத்தாள் கசிவு அல்லது பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா பற்றியது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. இந்த சதுரங்க ஆட்டம் இன்னும் ஆழமானது; நேரடியாக, லடாக் நிலப்பரப்பை இலக்காக கொண்டது.ஏ.ஐ., புரட்சிக்கு...https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ugc6b3ve&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த பிப்ரவரியில், ஜப்பான், தென் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, அமெரிக்கா தலைமையிலான, 'பாக்ஸ் சிலிக்கா' கூட்டணியில் நம் நாடும் இணைந்தது. உலகளாவிய சிலிக்கான், செமி கண்டக்டர் மற்றும் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு உட்கட்டமைப்பு துறையில், சீனாவின் முழுமையான ஏக போக ஆதிக்கத்தை உடைப்பதே இந்த கூட்டணியின் நோக்கம். இந்த ஏ.ஐ., புரட்சிக்கு வலுசேர்க்க, உலகிற்கு அதிகளவில் லித்தியம் தேவைப்படுகிறது.ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் பெரிய அளவில் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், நம் நாடு மிகப்பெரிய லாபத்தை பெற்றுள்ளது. இந்த சூழலில் தான், லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், லடாக்கை அரசியலமைப்பு ஆறாவது அட்டவணையில் சேர்க்கக் கோரி வருகிறார். இது, மத்திய அரசின் உட்கட்டமைப்பு திட்டங்களை உள்ளூர் அமைப்புகள் முறியடிக்க முழுமையான அதிகாரத்தை வழங்கும். இந்த அதிகாரம் வழங்கப்பட்டால், உள்ளூர் அமைப்புகள் லித்தியம் சுரங்கப் பணிகளை முழுமையாக முடக்க முடியும். சுயநலத்துக்காக...இது, நாட்டின் உலகளாவிய ஏ.ஐ., இலக்குகளை உடனடியாக பலவீனப்படுத்தும். அப்படி நடந்தால், நம் அண்டை நாடான சீனாவுக்கு தான் லாபம். சோனம் வாங்சுக், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர், சீன கம்யூ., கட்சியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றனர். தங்களின் சுயநலத்துக்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வர். இவர்களை நாம் ஆதரிப்பது அருவருப்பானது.நாடு முழுவதும் திடீரென வெடித்துள்ள போராட்டங்கள் இயற்கையானவை அல்ல. அவை நாட்டின் எழுச்சியை சீர்குலைக்க வடிவமைக்கப்பட்ட ஆழமான ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை தடுத்து நிறுத்துவது, செமி கண்டக்டர், விண்வெளி மற்றும் ராணுவ வளர்ச்சிகளை நாசப்படுத்துவது, 'கிரேட் நிக்கோபார்' திட்டத்தை நிறுத்துவது, வெளிநாட்டு நன்கொடை பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றாமல் தடுப்பதே இந்த போராட்டத்தின் நோக்கம்.ஒவ்வொன்றும் தனி போராட்டம் போல் தோன்றும். ஆனால், இதற்கு பின்னால் இருப்பவர்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தை தூண்டிவிடுகின்றனர். எனவே, நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இறுதி நாடகத்தை அவர்கள் அரங்கேற்றுவதற்கு முன்னரே, சதித்திட்டத்தை நாம் கண்டறிய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

அப்பாவி
ஜூலை 25, 2026 07:22

இப்போ மழை பெய்யாம இருப்பது கூட சீனா வின் சதியா இருக்கும். நிபுணர்களை வெச்சு ஆய்வு செய்யுங்க.


guna
ஜூலை 25, 2026 08:20

சீன சதி தான் என்று கூறுகிறார்கள்


Manickam Mani
ஜூலை 31, 2026 20:03

தேசப்பற்றாளர்?


Abdul Rahim
ஜூலை 24, 2026 14:14

அப்ப டேஷ் பக்தாள்ஸ் சீனாவை கண்டித்து ராம்லீலா மைதானத்தில் ஓப்பனாக ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதானே பாகிஸ்தான ந..ந.நாக்கு வரண்டு போச்சு போல இப்ப சீனாவ ந. தொடங்கியாச்சு த்தூ மானங்கெட்டவனுங்களா....ஏண்டா இந்த புலனாய்வு புலி நிபுணர்கள் ஏன் புல்வாமா மற்றும் பஹல்காம் தாக்குதல் பற்றி தகவல் தரல அப்படி தந்திருந்தா டேஷ் பக்தர் அரசு அத தடுத்திருக்கும்ல????அட இப்பவாவது சீனா மேல போர தொடுங்களேன்...


ராஜா
ஜூலை 24, 2026 13:04

வெளிநாடுகளின் பங்களிப்பு கணிசமாக இருப்பது நன்றாக தெரிகிறது. இதற்கு உறுதுணையாக இருக்கும் சமூக வலைதளங்களுக்கு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். மேலும், உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு உறுதுணையாக இங்கே செயல்படும் அரசியல் தலைவர்கள் கட்சி பாகுபாடின்றி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.


தஞ்சை மன்னர்
ஜூலை 24, 2026 13:01

இங்கேதான் நரேந்திர தமோதிர தாஸ் ராஜதந்திரம் இருக்கு சைனா மீது பழிபோட்டால் உண்மையன குற்றவாளி தானாக வெளிவந்துவிடுவான் நாம ஈஸியா அமுக்கி பிடித்துவிடலாம் என்று எண்ணி இருப்பார் ஏன் என்றால் நாமோ மற்றும் அவரோட அடிவருடிகள் எபோதும் பாகிஸ்தான் பாகிஸ்தான் என்று கூவி போரடித்து விட்டது


சம்சூ காதர் பேட்டை
ஜூலை 24, 2026 13:37

எதே தஞ்சை மன்னரா? செவுளில் ஓங்கி ஒரு அரை உடுங்க போலீஸ்... சும்மா உய்ய்ய்.....னு கதறணும் பிச்@


Raghu
ஜூலை 24, 2026 13:01

நாட்டில் புதுசா ஏதாவது நல்ல செய்தி இருந்தா போடுங்க. இந்த எழவ கேட்டு கேட்டு அழுத்துப் போச்சு மாதாமாதம் வெளிநாட்டு சுற்றுலா டூர் பேக்கேஜ் போவாரே ஒருத்தர் அவர் இன்னும் விருது வாங்க டூர் போகலையா? அவர் போன ஒத்த ஓட்டு முத்தையா கட்சியோட ராகுலும் டூர் போவார்


ராகு
ஜூலை 24, 2026 13:41

எழவு ரகு இப்போதான் டாஸ்மாக் போதை தெளிஞ்சு வெளிய வருது


Gnana Subramani
ஜூலை 24, 2026 12:14

வெளியுறவு அமைச்சர் பொங்கி இருப்பாரே


Gnana Subramani
ஜூலை 24, 2026 12:13

உடனடியாக சீன நிறுவனங்கள் இந்தியாவில் இயங்க தடை செய்யப்படுமா. சீனாவுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படுமா


Gnana Subramani
ஜூலை 24, 2026 12:12

சீனாவின் தூதரை வரவழைத்து கண்டிக்க வேண்டியது தானே. விஸ்வகுரு நாட்டின் மீதே இப்படி செய்ய முடியுமா


Gnana Subramani
ஜூலை 24, 2026 12:10

அப்போ ஆர் எஸ் எஸ் படை கிளம்பிப் போய் சீனாவை தாக்கப் போகிறது


ravi
ஜூலை 24, 2026 12:21

சூன்யம்.. உடனே ஓடி போயி டாஸ்மாக் உள்ள குடும்பத்தோட பதுங்கிக்கோ


NALAM VIRUMBI
ஜூலை 24, 2026 10:36

சில அறைகுறைகள் உலக அரசியல் அறிவின்றி மத்திய அரசுக்கு எதிராக இங்கு பதிவிடுகிரார்கள். தற்போது நடந்து வரும் கரப்பான் பூச்சி கலவரம் சர்வதேச சதி என்பதே உண்மை. தேசத்தின் வளர்ச்சியை முடக்குவதே அந்த தீய சக்திகளின் நோக்கம். ஆனால் அது நடக்காது. பெரிய ஆப்பு காத்திருக்கிறது.


முக்கிய வீடியோ