உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீனாவால் உலகத்துக்கே பிரச்னை: ஜெய்சங்கர் ‛‛சுளீர்

சீனாவால் உலகத்துக்கே பிரச்னை: ஜெய்சங்கர் ‛‛சுளீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்துக்கே சீனா பிரச்னையாக உள்ளது'', என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.புதுடில்லியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: பல வழிகளில் சீனா பிரச்னையாக உள்ளது. அந்நாட்டின் தனித்துவமான அரசியல், பொருளாதாரமே இதற்கு காரணம். அதன் தனித்துவத்தை ஒருவர் புரிந்து கொள்ளாவிட்டால், அங்கிருந்து வரும் தீர்வுகள், முடிவுகள் அனைத்தும் சிக்கலானதாக இருக்கும். வர்த்தகத்தில் சீனா அனுபவித்த நன்மைகளை கவனத்தில் கொள்ளாததால் பலர் அந்நாட்டுடனான வர்த்தக பற்றாக்குறை பற்றி புகார் செய்கிறார்கள்.சீனாவை பற்றி நாம் மட்டும் விவாதிக்கவில்லை. ஐரோப்பா கண்டத்தில் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு என அனைத்திலும் சீனாவை பற்றி மட்டுமே விவாதிக்கின்றனர். அந்நாட்டுடன் அமெரிக்கா பல வழிகளில் மோதி வருகிறது. எனவே, உண்மையில் இந்தியாவுக்கு மட்டும் சீனா பிரச்னை இல்லை. இந்தியாவுக்கும், உலகிற்கும் சீனா ஒரு பிரச்னையாக உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Jay
செப் 01, 2024 10:50

சீனா தனது மக்களை நல்வழியில் நடத்துகிறது. வெள்ளைக்காரன் ஆட்சி செய்த போது இருந்த அடிமைத்தனத்தை மக்கள் மனதில் இருந்து முற்றிலும் அகற்றி வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மக்களின் மனநிலைமையை கொண்டு வந்துள்ளார்கள். இதை ஜனநாயக நாட்டில் கொண்டு வருவது சிரமம். அதிலும் நமது நாட்டில் இது மிகவும் சிரமம். மக்கள் மனநிலை மேம்படாமல் தொடர்ந்து தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று பரம்பரையாக ஆட்சி செய்யும் கட்சிகள் நினைக்கின்றன. மக்கள் உழைக்கும் திறனை மேம்படுத்துவதை குறைக்கும் விதமாக இலவசங்களை அள்ளித் தெளித்து மக்கள் உழைக்கும் திறன் அதிகமாகாமல் இங்கு உள்ள அரசியல் கட்சிகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நாட்டுக்கு எதிராக தொடர்ந்து பிரிவினைவாதம் பேசும் அரசியல் கட்சிகள் மாநிலத்தில் இருக்கின்றனர். சீனா தனது நாட்டுக்கு எதிராக செயல்படும் அனைத்து சக்திகளையும் அடக்கி ஒடுக்குகின்றனர். உதாரணத்திற்கு அங்கு சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் பழக்க வழக்கத்தினை கடுமையாக கட்டுப்படுத்தி அவர்கள் முஸ்லிம்களாக இல்லாமல் முதலில் சீனர்களாக இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர்.


Ramesh Sargam
ஆக 31, 2024 20:19

ஆனால் Cheap China பொருட்கள் இந்தியாவில் கொட்டிக்கிடக்கிறது. அவைகள் உண்மையில் சைனாவில் இருந்து வந்தனவா அல்லது இங்கேயே தயாரிக்கப்பட்டு Made In China என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை ஆகின்றனவா...? ஜெய்ஷங்கர் அவர்கள் கூறியதுபோல, சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் உலகத்துக்கே பிரச்சினை...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 31, 2024 20:01

இப்படிப்பேசி பயனில்லை ..... இறக்குமதிகளைக் குறையுங்க .....


T.sthivinayagam
ஆக 31, 2024 19:48

சில கட்சிகளால் பிற்படுத்தபட்ட ,தாழ்த்தபட்ட மற்ற்றும் மிகமும் தாழ்த்தபட்ட சமுகனத்திற்கு பிரச்சனை என மக்கள் கூறுகின்றனர்


சிவகுரு
ஆக 31, 2024 16:53

ஆனா சீனாவிடமிருந்து நம்ம இறக்குமதி ஏறிக்கிட்டே போகுது. அது பிரச்சனையே இல்லை.


R.Gunasekharan
ஆக 31, 2024 16:43

உண்மையை உரக்க சொன்னீர் .


ஆரூர் ரங்
ஆக 31, 2024 16:42

சீனாவில் தெருவுக்குத் தெரு டாஸ்மாக் பார் கிடையாது. யாரும் குடித்துவிட்டு வேலைக்கு வருவதில்லை. கடுமையாக திறமையாக உழைக்கிறார்கள். 200க்குக் கொடி பிடித்து போலி போராட்டத்தில் ஈடுபடுவதில்லை. மூர்க்கம் கடுமையாக அடக்கப்பட்டுள்ளது. குக்கர் , சிலிண்டர் வெடிப்பு நடப்பதில்லை. ஊடக சுதந்திரம் என்ற பெயரில் தேசத்தின் இறையாண்மையை எதிர்த்து பதிவிடமுடியாது. லஞ்சம் கிடையாது. ( தனியார் நிறுவனங்கள் சார்பில் அரசே அன்னிய நாட்டு அரசியல்வாதிகளுக்கு கட்டிங் கொடுக்கிறது என்பது வேறுவிஷயம்). இங்கும் அந்நிலை வரும் வரை பொருளாதாரமே முன்னேறாது. இங்கும் எல்லோருக்கும் கடுமையான தேசபக்தி வரும் வரை சும்மா சீனாவை எதிர்த்து பயனில்லை.


M Ramachandran
ஆக 31, 2024 23:32

சரியான பதிவு. முதிர்ச்சி தெரிகிறது. அது திராவிடத்திற்கு எரிச்சலை கிளப்பியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை