உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகள் பயன்படுத்திய சீன செயலிகள்

பயங்கரவாதிகள் பயன்படுத்திய சீன செயலிகள்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த,22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்,26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர்; கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதுகுறித்து என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது:

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தங்களை ஏவியவர்கள் வசிக்கும் பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்ள,சீன தயாரிப்பு மொபைல் போன் செயலிகளை பயன்படுத்தியுள்ளனர்.அந்த செயலிகளுக்கு, இந்தியாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் பரிமாறப்படும் தகவல்களை விசாரணை அமைப்புகளால் கையாள முடியாது என்பதால், பயங்கரவாதிகள் பயன்படுத்தி உள்ளனர்.பஹல்காம் தாக்குதல் நடந்த நாளில், அந்த பகுதியிலிருந்து, சீன தயாரிப்பு சேட்டிலைட் போன் ஒன்றை அங்கிருந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர்.இவற்றை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

P.ramesh Hanumaiah
ஏப் 29, 2025 23:44

Remove pakisthan from the global map for the piece of entire world. We all support you. Jai hind


என்றும் இந்தியன்
ஏப் 29, 2025 16:45

பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தான் மிலிட்டரி ஆள் அவர்கள் பயன் படுத்தியது சீன செயலி???ஆனால் இவர்களுக்கு பாகிஸ்தான் சீனா ....... சப்போர்ட் செய்யுமாம் இந்தியாவின் இது பழி சுமத்துமாம்


thewhistle blower1967
ஏப் 29, 2025 16:04

சீனா தூணிலும் துரும்பிலும் இருப்பான் இந்தியா இன்னும் 100 வருஷம் பின் தங்கி உள்ளோம் ..அதை முதலில் சரி செய்து பின் சீனாவை எதிர்ப்பதை பற்றி யோச்சிக்கலாம் ..


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 29, 2025 09:42

திபெத், மங்கோலியா, கிழக்கு துருக்கிஸ்தான் போன்ற பகுதிகளை சீனாவிடம் இருந்து விடுவிக்க நாம் உலகநாடுகளை ஒன்றிணைந்து செயல் படவேண்டும். சீனாவை பல வழிகளில் பலவீனம் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நமது முதல் எதிரியே சீனா தான்.


Senthoora
ஏப் 29, 2025 05:43

சீன தயாரிப்பு இல்லாத நாடே இல்லை, இதில் சீன செயலி இருப்பது புதியதல்ல.


புதிய வீடியோ