உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சினிமா என் ஆன்மாவின் இதயத்துடிப்பு: தாதாசாகேப் பால்கே விருது வென்றது குறித்து மோகன்லால் பெருமிதம்

சினிமா என் ஆன்மாவின் இதயத்துடிப்பு: தாதாசாகேப் பால்கே விருது வென்றது குறித்து மோகன்லால் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சினிமா என் ஆன்மாவின் இதயத்துடிப்பு என தாதாசாகேப் பால்கே விருது வென்றது குறித்து நடிகர் மோகன்லால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.டில்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். பின்னர் விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் லால் உருக்கமான உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: இந்திய சினிமாவின் தந்தையின் பெயரில் இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு கவுரவமான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற இன்று, உங்கள் முன் நான் மிகுந்த பெருமையுடனும் நன்றியுடனும் நிற்கிறேன். சினிமா என் ஆன்மாவின் இதயத் துடிப்பு. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் இந்த தருணத்தை கனவில் கூட நினைத்ததில்லை. தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ளதாக மத்திய அரசு இடமிருந்து அழைப்பு வந்ததும், தங்கள் மலையாள சினிமா பாரம்பரியத்தின் குரலாக என்னைத் தேர்வு செய்துள்ளதாக எண்ணிப் பெருமிதம் கொண்டேன்.மலையாளத் திரைப்படத் துறையின் பிரதிநிதியாக, இந்த தேசிய அங்கீகாரத்தை பெற்றுக்கொள்கிறேன். மாநிலத்திலிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெறும் இளைய மற்றும் இரண்டாவது நபராக பணிவுடன் இந்த விருதை ஏற்கிறேன். இந்த தருணம் என்னுடையது மட்டுமல்ல. ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்கும் சொந்தமானது. இவ்வாறு மோகன்லால் பேசினார்.

ஷாருக்கான் வாழ்த்து

டில்லியில் இன்று நடந்த விழாவில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் மோகன் லாலை கட்டி அணைத்து ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் நடிகை ராணி முகர்ஜி மற்றும் விக்ரந்த் மாசே உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நாயர்
செப் 24, 2025 09:05

140 கோடி பேர்களுக்கும் அர்ப்பணிக்கலியா?


அப்பாவி
செப் 24, 2025 09:04

கூத்தாடிதான் இந்தியாவின் இதயநாடி. சீக்கிரம் பாரத ரத்னா வாங்கிட வாழ்த்துக்கள் ...


Vasan
செப் 24, 2025 02:03

மோகன்லால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்


Sun
செப் 23, 2025 23:08

அண்ணனுக்கு ஒரு எம்.பி போஸ்ட் பார்சல் !


vivek
செப் 24, 2025 06:00

இது ஒரு மூளை மழுங்கிய டாஸ்மாக் கொத்தடிமை போல


Vijay D Ratnam
செப் 23, 2025 22:07

இந்திய சினிமாவின் ஐகான் கமல்ஹாசன் என்று ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே சொல்லும். இருந்து என்ன செய்ய. சேர்க்கை சரியில்லை. சேராத இடம் சேர்ந்தா இதையெல்லாம் இழைக்கணும். தாதா சாகேப் பால்கே விருது வாங்க அசத்திய திறமை வேணும். சிறந்த நடிகருக்காக நான்கு முறை தேசிய விருது வாங்கிட்டா பெரிய பிஸ்தாவா, இந்த கமல். ஐந்தாவதாக முறையாக தேவர் மகன் படத்துக்கு சிறந்த படம் என்று தேசிய விருது வாங்கிட்டா பெரிய ஆளா இந்த கமல். காலா, கபாலி, லிங்கா, கோச்சடையான், லால்சலாம், அண்ணாத்தே போன்ற காலத்தால் அழியாத அற்புதமான காவியங்களை படைத்த ரஜினிகாந்த் அளவுக்கு திறமைசாலியா இந்த கமல்ஹாசன். அட்லீஸ்ட் மோகன்லால் அளவுக்கு திறமைசாலி ஆயுடுவாரா இந்த கமல்ஹாசன். ஏ யப்பா அடுத்து இசைஞானி இளையராஜாவுக்காவது கொடுங்கப்பா. அத்த உட்டுப்போட்டு அடுத்த தாதா சாகேப் பால்கே விருதை நாயுடு மச்சான் பாலகிருஷ்ணாவுக்கு கொடுத்தாலும் சரி, கருணாநிதி பேரன் உதயநிதிக்கு கொடுத்தாலும் சரி. எவன் கேட்கப்போறான். கமலுக்கு வருத்தம் இருக்கலாம். யாராவது அவரிடம் சொல்லுங்கள் "சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்" என்றான் வள்ளுவன். அதாவது தம்மினும் உயர்ந்தாரிடம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் பக்குவம் ஆகும்.


முக்கிய வீடியோ