உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான நிலையங்களின் பாதுகாப்புக்கு புதிய பிரிவை அமைத்தது சி.ஐ.எஸ்.எப்.,

விமான நிலையங்களின் பாதுகாப்புக்கு புதிய பிரிவை அமைத்தது சி.ஐ.எஸ்.எப்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டின் 68 விமான நிலையங்களில் பாதுகாப்பை வழங்கும், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை, அதன் விமானப் பாதுகாப்பு பிரிவின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த, தரக் கட்டுப்பாட்டுப் பிரிவை அமைத்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை, நம் நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு வழங்குகிறது. இந்த படையில், 1.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.இந்நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் விமான பாதுகாப்பு பிரிவின் செயல்பாட்டு திறனை மேம்படுத்த, உள் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி நேற்று கூறியதாவது:நம் நாட்டின் விமான நிலையங்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தை நிறுவுவதில், உள் தரக்கட்டுப்பாட்டு பிரிவு முக்கியமான பங்கு வகிக்கும்.இந்த புதிய பிரிவு, விமான பாதுகாப்பு நடைமுறைகளில் சீரான தன்மையை கொண்டு வருவதோடு, உலகம் முழுதும் கிடைக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த பரிந்துரை செய்யும்.மத்திய தொழில் பாதுகாப்பு படையின் விமான பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த பிரிவு, டில்லியை மையமாக வைத்து செயல்படும். அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை ஒருங்கிணைப்பதற்கான மையப்படுத்தப்பட்ட தளமாக இந்தப் பிரிவு செயல்படும். மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி, இந்த புதிய பிரிவை வழிநடத்துவார். சான்றளிக்கப்பட்ட விமான பாதுகாப்பு பயிற்றுநர்கள், இந்தப் பிரிவில் பணியாற்றுவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar
டிச 08, 2024 15:35

இந்த காவல் படையினர் எதோ தாங்கள்தான் எதோ குடியேற்ற அதிகாரிகள் என்ற நினைப்பில் பாஸ்போர்ட்களையும் டிக்கெட் களையும் பரிசோதனை செய்வதை பார்த்தால், சிரிப்புதான் வருகிறது. இதில விசேஷம் என்னவென்றால், நிறையபேருக்கு படிப்பறிவும் இல்லை, கண் பார்வையும் சரியில்லை


V RAMASWAMY
டிச 08, 2024 10:21

மிகவும் வரவேற்கத்தக்க யோசனை. ஒவ்வொரு மாநிலத்திலும் காவல் துறையிலிருக்கும் ஏராள காவலர்களை எம் எல் ஏக்களுக்கும் எம் பிக்களுக்கும் பாதுகாப்பாக அனுப்புவதால் பொதுமக்கள் பாதுகாப்புக்கு போதுமான காவலர்களே இருப்பதில்லை, சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரித்துவரும் காலத்தில், அக்னீவீர் பயிற்சி பெற்ற வீரர்களை எம்எல் ஏக்கள், எம்பிக்கள் பாதுகாப்பிற்காக அனுப்பி காவலர்களை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக விடுவிக்கலாம். அல்லது, அவர்களே ஒரு வரைமுறைக்குள் தங்கள் சொந்த பாதுகாப்புகளை ஏற்பட்டு செய்து அதற்கான செலவை அரசிடமிருந்து பெறலாம். அரசு இதனை தீவிரமாக யோசனை செய்யவேண்டும்.


சமீபத்திய செய்தி