உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாத குழுக்கள் இடையே மோதல்; வியூகத்தை மாற்றுகிறது இந்திய ராணுவம்

பயங்கரவாத குழுக்கள் இடையே மோதல்; வியூகத்தை மாற்றுகிறது இந்திய ராணுவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானில் இருந்து ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவும் ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் லஷ்கர் பயங்கரவாத குழுக்களுக்கு இடையே கருத்து முரண்பாடு தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, பயங்கரவாத தடுப்பு உத்திகளை நம் ராணுவம் மறுசீரமைப்பு செய்து வருகிறது.பாகிஸ்தான் ராணுவத்தின் முழு ஆதரவுடன், ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் லஷ்கர் பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களின் உதவியுடன் அவர்கள் ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவுகின்றனர்.கடந்த சில மாதங்களாக இந்த இரு பயங்கரவாத குழுக்கள் இடையே சித்தாந்த அடிப்படையிலான கருத்து முரண் ஏற்பட்டதாக நம் உளவுத்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.தெற்காசியாவில் நடத்தப்படும் தாக்குதல் விவகாரத்தில் அவர்கள் இடையே கருத்து முரண் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இணைந்து செயல்படுவதில்லை என்றும் தெரிகிறது. அவர்களை சமாதானப்படுத்த பாக்., ராணுவம் செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதையடுத்து, அதிக எண்ணிக்கையிலான ஜெய்ஷ் பயங்கரவாதிகளை நம் பகுதிக்குள் ஊடுருவ பாக்., ராணுவம் உதவியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.இதன் காரணமாக, ஜம்மு - காஷ்மீருக்குள் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் குறித்து பரஸ்பரம் அவர்களே மாறி மாறி நம் உளவுத்துறையிடம் தகவல் தெரிவிக்கின்றனர். இதனால், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை உத்திகளில் நம் ராணும் பல மற்றங்களையும், மறுசீரமைப்புகளையும் செய்வதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kalyanaraman
ஏப் 01, 2025 07:11

விரைவில் பாக் - மூன்றாகவோ நான்காகவோ உடையும் காலம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது.


MUTHU
ஏப் 01, 2025 11:47

இங்கே சீமான் ஸ்டாலின் த வெ கா போன்றோர் ஒவ்வொரு மாநிலத்திலும் பெருகி விட்டால் அல்லது ராகுல் காந்தி பொறுப்பேற்றால் இந்தியாவும் இருபது ஆண்டுகளில் நாற்பது நாடுகளாய் போய் விடும்.


subramanian
ஏப் 01, 2025 22:48

முப்பது வருடமாக இந்த கதை, நடக்கவில்லை. ஆனால் அப்போதும், இந்திய வுக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாகிஸ்தான் உடைவது நல்லது அல்ல.


Appa V
ஏப் 01, 2025 06:16

பாகிஸ்தான் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வலுவிழந்து கைபர் பக்துன்வா மற்றும் பலுசிஸ்தான் பிரச்னைகளில் தடுமாறுகிறது இன்னமும் லஸ்கர் தோஇபா ஜாயிஷ் முகமத் என்று அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறோம் இஸ்ரேல் போல தாக்குதல் நடத்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்


Iyer
ஏப் 01, 2025 10:40

அப்பா அவர்களே - பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலையை நமது அரசாங்கம் இரண்டு வருடங்களாக செய்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த 2 வருடத்தில் 200க்கும் மேற்பட்ட பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் பாகிஸ்தானிக்கு உள்ளேயே - துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வருகிறார்கள் . இதை எல்லாம் செய்வது யார் என்று ஆராயுங்கள்


முக்கிய வீடியோ