உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூரில் மீண்டும் மோதல்

மணிப்பூரில் மீண்டும் மோதல்

இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், டாமெங்லாங் மாவட்டத்தில் உள்ள பழைய டாமெங்லாங் மற்றும் டாய்லொங் கிராமங்களைச் சேர்ந்த நாகா சமூகத்தினரிடையே எல்லையில் உள்ள பகுதியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.இதை தீர்த்து வைக்க வலியுறுத்தி பழைய டாமெங்லாங் கிராமத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் எஸ்.பி., அலுவலகத்தை நோக்கி நேற்று முன்தினம் இரவு பேரணியாக சென்றனர்.அப்போது, இரு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த பொதுப்பணித் துறை அலுவலகம் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டது.பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இந்த மோதலில், 12 பாதுகாப்பு படையினர் உட்பட 25க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !