உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் கைகலப்பு; எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் கைகலப்பு; எம்.எல்.ஏ.,க்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சிறப்பு அந்தஸ்து கோரிய தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது அரசியலமைப்பு சட்டப் பிரிவு, 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு -காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qas1ryc6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது, முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றார்.பதவியேற்றதுடன் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி அமைச்சரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினார். அத்தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா ஒப்புதலும் அளித்தார்.6 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரின் சட்டசபை கூட்டத்தொடர், கடந்த 4ம் தேதி தொடங்கியது. மக்கள் ஜனநாயகக் கட்சியின் எம்.எல்.ஏ., வஹீத் பாரா, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்தும், அதை மீண்டும் அளிக்கக் கோரியும், தீர்மானம் தாக்கல் செய்தார். இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை விதிகளை மீறி, தீர்மானம் தாக்கல் செய்த பாராவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில், இன்றும் அவை கூடியதும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சிறப்பு அந்தஸ்தை ஆதரித்து இன்ஜினியர் ரஷீதின் சகோதரர் குர்ஷித் அகமது பேனரை காட்டினார். இதனால், ஆத்திரமடைந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அவரை தாக்க முயன்றனர். இதனால், அவையில் பதற்றம் நிலவியது. அமைதி காக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டும் கேட்க மறுத்ததால், குர்ஷித் அகமது மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை அவைக்காவலர்கள் சட்டசபையில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றினர். இதையடுத்து, அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Narayanasamy
நவ 08, 2024 07:45

அவர்களுக்கு ஜனாதிபதி ஆட்சி மட்டுமே எடுபடும். தேசிய சிந்தனை கிடையாது.


அப்பாவி
நவ 07, 2024 17:54

இவிங்க கட்சி ஆளுங்கதான் பாராளுமன்ற கூட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தரணும்னு கோரிக்கை வெப்பாங்க.


SENTHIL NATHAN
நவ 07, 2024 16:34

அப்துல்னு உண்மையான பெயரில் கருத்துப்போடு


ram
நவ 07, 2024 15:04

ஜம்மு அண்ட் காஷ்மீர் தனியாக பிரித்து இருக்க வேண்டும் மற்றும் காஸ்மீரில் தேர்தல் நடத்தியிருக்க கூடாது அங்கு ஜனாதிபதி ஆட்சி தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்துஇருக்கும் .


ராமகிருஷ்ணன்
நவ 07, 2024 15:01

ராணுவத்துடன் நிரந்தர ஜனாதிபதி ஆட்சி தான் கொஞ்சம் காலத்துக்கு நல்லது முழுவதும் தீவிரவாதிகளை ஒழித்து விடலாம். அந்த மக்கள் மற்ற மாநிலங்களில் உள்ள வளர்ச்சி புரிந்து கேட்டு திருந்திய பின்னர் தேர்தல் நடந்தால் போதும். சிறிதும் இரக்கபட தேவையில்லாத மாநிலம்.


PalaniKuppuswamy
நவ 07, 2024 14:40

இந்தியாவுடன் இணக்கமாக இருக்க முடியாதவர்கள்.. உங்களுக்கான பாகிஸ்தான் நாடு உள்ளது. அடிமை வாழ்க்கை ஏன் இங்கே ? உங்கள் சுதந்திரதை. பாகிஸ்தான் சென்று கொண்டாடுங்கள்.


Lion Drsekar
நவ 07, 2024 14:30

இது ஒரு தனி நாடு, அங்கு அவர்கள் குடும்பத்த தவிர வேறு யாருக்குமே இடம் கிடையாது, அதற்க்கு மேல் எதுவுமே சொல்வதற்கு இல்லை, வந்தே மாதரம்


Ms Mahadevan Mahadevan
நவ 07, 2024 12:58

இதற்கு பேசாமல் தேர்தல் நடத்தாமல் இருந்திருக்கலாம். தனித்தனி சட்டம் கேட்போர் சிறையில் அடைக்க பட வேண்டும்


தமிழ்வேள்
நவ 07, 2024 12:36

இதற்குத்தான் காஷ்மீருக்கு சட்டமன்றம் தேர்தல் எல்லாம் இன்னும் கொஞ்ச காலத்துக்கு தேவையில்லை என்று சொன்னது ..உமர் பாய் வந்தவுடனேயே கொலை குண்டுவீச்சு ....போதாக்குறைக்கு ஆட்சி வேறு இவனிடம் ...பாகிஸ்தான் வேரோடு அழிக்கப்படாமல், காஷ்மீரில் அமைதி வராது.


SUBBU,MADURAI
நவ 07, 2024 11:53

PDP has also moved a fresh resolution in J


புதிய வீடியோ