உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவனை கடத்தி கொன்ற சக நண்பர்கள்!

ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவனை கடத்தி கொன்ற சக நண்பர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் 9ம் வகுப்பு மாணவனை, பணத்துக்காக அவனது நண்பர்களே கடத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; டில்லியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவனை, அவனது நண்பர்களே கடத்தி உள்ளனர். பின்னர், மாணவனின் பெற்றோரிடம் ரூ.10 லட்சம் தருமாறு தொலைபேசியில் பேரம் பேசி உள்ளனர். பண பேரம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் கடத்தப்பட்ட மாணவனை, சக நண்பர்களே அடித்து உதைத்து கொலை செய்து பால்ஸ்வா ஏரியில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர். மாணவன் கடத்தல் பற்றிய தகவல் கிடைத்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நண்பர்களே மாணவனை பணத்துக்காக கடத்தி பின்னர் கொன்றதை கண்டுபிடித்தனர். இந்த சம்பவத்தில் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, பணத்துக்காக மட்டுமே கடத்தல் நடந்ததா, வேறு ஏதேனும் காரணங்களா என்பதை பற்றி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rizwan
மார் 27, 2025 08:58

Currently bjp govt.


MP.K
மார் 26, 2025 16:38

Law and order in New Delhi are dangerous now


தமிழ்வேள்
மார் 26, 2025 13:43

நீதிபோதனை வகுப்புகள் கட்டாயம் தேவை ...சினிமா தொலைக்காட்சிகளின் நேரத்துக்கும் நிகழ்ச்சிகளுக்கும் கடுமையான தணிக்கைகள் தேவை .


Jay
மார் 26, 2025 13:24

கடத்தப்பட்ட மாணவன் ஒன்பதாவது படிக்கிறான் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. கடத்தியவர்கள் பள்ளி மாணவர்களா என்பதை தெளிவாக சொல்லவில்லை.


Ramesh Sargam
மார் 26, 2025 13:11

இந்த வழக்கை துரிதகதியில் விசாரித்து, அதாவது ஜாமீன் ஜாமீன் என்று ஜாமீன் வழங்கி காலம்கடத்தாமல், குற்றம்செய்த மாணவர்களுக்கு மரணதண்டனை மட்டும்தான் விதிக்கவேண்டும். அல்லது ஓடவிட்டு சுட்டுவிடுவது மிகவும் சிறந்தது.


அசோகன்
மார் 26, 2025 13:06

ஆம் ஆத்மீயும் திமுகவும் ஒன்றுதான்..... தமிழ் நாட்டிலும் மக்கள் விழிப்பார்கள்


Ramesh Sargam
மார் 26, 2025 13:01

குற்றம் செய்த மாணவர்கள் தூக்கு தண்டனை பெறவேண்டும்.


Ganapathy
மார் 26, 2025 11:46

பத்து வருட ஆம் ஆத்மி மற்றும் 15 வருட காங்கிரஸ் ஆட்சியில் "அறன் செய்ய விரும்பு" என்பதை "அறுத்து கொலை செய்ய பழகு செஞ்சுபுட்டு ஆத்துல ஏரில பாடியை போடு" என தமிழக திராவிட மாடலில் உள்ளது போன்றே கல்வியை கற்றுக் கொடுத்ததால் நடந்த விளைவு இது.


T.S.Murali
மார் 26, 2025 13:26

15 வருட காங் மற்றும் ஆம் ஆத்மீ ஆட்சி செய்த போது நடக்காதது இப்போ நடக்கிறது என்றால் இப்போ யார் ஆட்சி நடக்கிறது என்பது கண்கூடு.


Ganapathy
மார் 26, 2025 11:39

மக்கள் தொகை அதிகரிக்கும்போது தண்டனைச் சட்டங்களும் கடுமையாக ஆக்கப்பட வேண்டும். தண்டனைகளும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.


Ganapathy
மார் 26, 2025 11:36

கொலையாளிகளில் கூட வயதைப் பொறுத்து மைனர் மேஜர் என நமது சட்டங்களும் நீதித்துறையும் வகைப்பாடு செய்யும் அறிவற்ற நிலையில் உள்ளன. நடுவுல குற்றவாளியின் மனித உரிமையையும் மதிக்கணும். நாசமா போக பாதிக்கப்பட்டவனுக்கு மனித உரிமை சலுகை கிடையாது. கடுங்குற்றவாளிகளை காவல்துறை பணிவுடன் விசாரிக்கணும். குற்றத்தின் கொடுமையைப் பொறுத்து தண்டனை கொடுத்தால் தான் குற்றங்கள் குறையும். குற்றவாளியின் ஒவ்வொரு மனித மிருக ஊர்வன பறப்பன என்ற எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்ட வேண்டும்...


புதிய வீடியோ