உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மங்கோலியாவில் இருந்து முதல் முறையாக ‘கோக்கிங் கோல்’ இறக்குமதி

மங்கோலியாவில் இருந்து முதல் முறையாக ‘கோக்கிங் கோல்’ இறக்குமதி

புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த ‘செயில்’ நிறுவனம், முதல்முறையாக மங்கோலியாவில் இருந்து ஒரு டன் ‘கோக்கிங்’ நிலக்கரியை விமானம் வழியாக இறக்குமதி செய்துள்ளது. ஸ்டீல் உள்ளிட்ட தொழில்துறைகளில் பயன்படும் கோக்கிங் நிலக்கரிக்கு, செயில் நிறுவனம் பெருமளவு ஆஸ்திரேலியாவையே சார்ந்துள்ளது. இதுகுறித்து செயில் தெரிவித்துள்ளதாவது: உள்நாட்டின் கோக்கிங் நிலக்கரி உற்பத்தி அளவு, தொழில்துறைக்கான தேவையை விட குறைவாக உள்ளதால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய இறக்குமதியை குறைக்க, மங்கோலியாவில் இருந்து ஒரு டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி, இந்தியாவின் ஸ்டீல் உற்பத்தி தேவைகளுக்கு ஏற்றதாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்படும். அத்துடன் தரம், விலை மற்றும் மங்கோலியாவில் இருந்து இறக்குமதி செய்ய கடல் வழி பாதை இல்லாத நிலையில், சீனாவை தவிர்த்து ரஷ்யா வழியில் கொண்டு வந்தால் சாத்தியப்படுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. ஸ்டீல் உற்பத்தியில் கோக்கிங் நிலக்கரிக்கு 40 சதவீதம் செலவாகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி