உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலாசாரம் தொடர்பான மோடியின் உரைகள் தொகுப்பு வெளியீடு

கலாசாரம் தொடர்பான மோடியின் உரைகள் தொகுப்பு வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : கலாசாரம், பாரம்பரியம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில், டில்லியில் நடந்த விழாவில், இந்த தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூனா அகாரா எனப்படும் ஹிந்து மடத்தின் தலைவர் அவதேஷானந்த் கிரி மஹராஜ் இதை வெளியிட்டார். ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.இதில், 2015 சுதந்திர தின உரையில் இருந்து, கடந்தாண்டு வாரணாசியில் நடந்த நிகழ்ச்சி வரை, பிரதமர் நிகழ்த்திய, 34 உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த உரைகளில், நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், ஆன்மிகம் தொடர்பாக அவர் பேசியவை மட்டும் இதில் இடம்பெற்றுள்ளன.ஆன்மிக தலைவர்களான ஆச்சாரியா பிரக்யா சாகர் ஜி மஹராஜ், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி ஆகியோரின் கருத்துக்களும் இதில் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை