| ADDED : ஏப் 06, 2025 11:09 PM
ஒஸ்மனாபாத்: மஹாராஷ்டிராவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே, 20 வயது கல்லுாரி மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மஹாராஷ்டிராவின் ஒஸ்மனாபாத் மாவட்டத்தில் தாராசிவ் நகரம் உள்ளது. இங்குள்ள தனியார் கல்லுாரியில் சமீபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், வர்ஷா கரத், 20, என்ற இளம்பெண் பேச்சு போட்டியில் பங்கேற்றார். பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண் திடீரென மேடையிலேயே மயங்கினார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக வர்ஷாவை சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.வர்ஷாவுக்கு, சில ஆண்டுகளுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதற்கான மருந்துகளை முறையாக அவர் எடுத்துக்கொள்ளாதது தான் இறப்புக்கு காரணம் எனவும், டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.