மேலும் செய்திகள்
சட்டவிரோத கட்டடங்கள் மின் இணைப்பு துண்டிப்பு
04-Jan-2025
விதிகளை தளர்த்த கூடாது
01-Jan-2025
பெங்களூரு: சொத்து வரி செலுத்தாத 830 வணிக கட்டடங்களுக்கு பெங்களூரு மாநகராட்சி 'சீல்' வைத்துள்ளது.பெங்களூரில் சொத்துக்களுக்கான வரியை மாநகராட்சி வசூலிக்கிறது. சொத்துவரி செலுத்த நவம்பர் வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் சிலர் சொத்து வரி செலுத்தாமல் டிமிக்கி கொடுத்தனர்.அத்தகையோருக்கு கடந்த நவ., 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அபராத தொகை இன்றி வரி செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னரும் சிலர் காலம் தாழ்த்தினர்.எரிச்சல் அடைந்த மாநகராட்சி அதிகாரிகள், உரிய நேரத்திற்குள் வரி செலுத்தவில்லை என்றால் வணிக கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்படும் என எச்சரித்தனர்.இதன்படி, இம்மாதம் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை, பெங்களூரில் எட்டு மண்டலங்களின் வருவாய் துறை அதிகாரிகள், நகரின் பல பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.சொத்து வரியை செலுத்தாமல் இருந்த 830 வணிக கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இந்த கட்டடங்களுக்கு சொத்து வரியை செலுத்துவதற்கான அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்னரும் வரியை செலுத்தவில்லை என்றால் கட்டடங்கள் ஏலம் விடப்படும் என மாநகராட்சி வருவாய் துறை சிறப்பு ஆணையர் முனிஷ் மவுத்கில் தெரிவித்துள்ளார்.
04-Jan-2025
01-Jan-2025