உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உணவுப் பாதுகாப்பில் உறுதி: மஹா.,வை அடுத்து குஜராத் அரசு தீவிரம்

உணவுப் பாதுகாப்பில் உறுதி: மஹா.,வை அடுத்து குஜராத் அரசு தீவிரம்

ஆமதாபாத்:மஹாராஷ்டிர மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராக இருக்கும் துக்காராம் முண்டே, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளார்.இதை கவனத்தில் கொண்டு, குஜராத் மாநில அரசு,உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 'ஆபரேஷன் ஹெல்த்' என்ற மாநிலம் தழுவிய உணவுப் பாதுகாப்பு ஆய்வு இயக்கத்தை இன்று தொடங்கியது.தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தாபாக்களை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரபுல் பன்ஷேரியா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, 2006-ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் குஜராத் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் இந்த இயக்கத்தை முன்னெடுத்துள்ளது.இயக்கத்தின் முக்கிய அம்சங்கள்:பயணிகள் மற்றும் பொதுமக்களுக்குத் தூய்மையான, சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய, அதிகாரிகள் நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற உணவகங்களில் ஆய்வுகளை மேற்கொள்வர்.அதிகாரிகள் தங்கள் ஆய்வுகளை FoSCoS (உணவுப் பாதுகாப்பு இணக்க அமைப்பு) இணையதளம் வழியாக நேரடியாகப் பதிவு செய்ய வேண்டும்.ஆய்வின் போது சந்தேகத்திற்கிடமான உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, 'புட் சேப்டி ஆன் வீல்ஸ்' (Food Safety on Wheels) எனப்படும் நடமாடும் ஆய்வகங்கள் மூலம் உடனடியாகப் பரிசோதிக்கப்படும்.சமையல்காரர்கள் தொப்பி, கையுறைகளைக் கட்டாயம் அணிய வேண்டும்; சமையலறை சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.சுகாதாரத் தரங்களை மீறும் உணவகங்களுக்குத் திருத்த நோட்டீஸ் வழங்கப்படும்; அத்துடன் உரிமம் தற்காலிகமாகமோ,அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படவோ நேரிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !