உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்

மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்தியப் பிரதேச சட்டசபை பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளது என மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்து உள்ளார்.மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. திருமணம் செய்த தம்பதிக்கு பிறக்கும் குழந்தைகள், தத்தெடுக்கப்படும் குழந்தைகள், வாடகைத்தாய் மூலம் பிறக்கும் குழந்தைகள் என அனைவருக்கும் சமமான அளவு சட்ட உரிமை வழங்க பரிந்துரை செய்யும் பொது சிவில் சட்ட மசோதா சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். இந்த மசோதா பலதார மணத்துக்கு தடை விதிக்கிறது. மூன்று முறை 'தலாக்' சொல்லி விவாகரத்து தரும் முஸ்லிம்களின் முத்தலாக்கை குற்றமாக கருதுகிறது. திருமணம் செய்யாமல் லிவ் - இன் முறையில் சேர்ந்து வாழ்வோர் அதை ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யாவிட்டால் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கவோ அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்கவோ பொது சிவில் சட்ட மசோதா பரிந்துரைக்கிறது.ஏற்கனவே, உத்தராகண்ட் மற்றும் குஜராத், அசாம் ஆகிய மாநிலங்கள் பொது சிவில் சட்ட மசோதாவைச் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rathna
ஜூலை 22, 2026 10:59

சவூதி அரேபியாவில் இது நடந்தாலும் தமிழ்நாட்டில் இது நடக்கவே நடக்காது. ஏன் என்றால் வோட்டு வாங்கி பிச்சை, நோன்பு கஞ்சி பிச்சை.


அப்பாவி
ஜூலை 22, 2026 08:04

அஞ்சு லட்சம் டன் அரிசி ஊழல் நடந்திருக்கு. எத்தனாலுக்கு ஒதுக்குன அரிசியை திருடி மறுபடியும் அரசுக்கே வித்திருக்காங்க. எங்கே? ம . பி லதான்


mindum vasantham
ஜூலை 22, 2026 09:14

நானும் சொல்ல நினைத்தேன்


venkat venkatesh
ஜூலை 22, 2026 00:30

Great


Dv Nanru
ஜூலை 21, 2026 18:10

மத்திய பிரதேசத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றியுள்ளது என்பது வரவேற்கத்தக்கது இதே போல் மற்ற மாநிலங்களில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் அப்போதுதான் முத்தலாக் முறை ஒழியும் முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் இப்போது பொது சிவில் சட்டம் என்றால் என்ன என்பதை பார்ப்போம் தனிநபர் சொத்து, திருமணம், விவாகரத்து மற்றும் ஒப்பந்தங்கள் போன்ற குடிமக்கள் இடையேயான பிரச்சனைகளைத் தீர்க்கும் சட்டமே சிவில் சட்டம் Civil Law ஆகும். இது தண்டனைக்குரிய குற்றங்களை விட, தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இழப்பீடு பெற்றுத் தரவும் வழிவகை செய்கிறது.சிவில் சட்டம் எவற்றையெல்லாம் உள்ளடக்கியது?குடும்ப சட்டம் Family Law: திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு மற்றும் ஜீவனாம்சம் தொடர்பானவை.சொத்து சட்டம் Property Law: நிலம், வீடு வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் பூர்வீக சொத்து உரிமை.ஒப்பந்த சட்டம் Contract Law: வணிக ஒப்பந்தங்கள் மற்றும் மீறல்களுக்கான இழப்பீடு.டார்ட் சட்டம் Tort Law: தனிநபர் அலட்சியத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு கோருதல்.இந்த உரிமையியல் வழக்குகள் அனைத்தும் இந்திய நீதிமன்றங்கள் மற்றும் தமிழ்நாடு மாவட்ட நீதிமன்றங்கள் மூலம் சிவில் நடைமுறைச் சட்டம் CPC - Code of Civil Procedure அடிப்படையில் விசாரிக்கப்படுகின்றன. தவறிழைத்தவர்கள் மீது அபராதம் அல்லது இழப்பீடு மட்டுமே விதிக்கப்படும், சிறைத்தண்டனை வழங்கப்படாது.


அன்பே சிவம்
ஜூலை 21, 2026 17:35

1). பெண்கள் மற்றும் எல்லா தரப்பு மக்களுக்கான சம உரிமைகள் வழங்கி எல்லாரும் சமமாக சமுதாயத்தில் ஒருங்கிணைந்து வாழ வழி வகை செய்யும் சட்டம்தான் பொது சிவில் சட்டம். 2). இந்தியா முழுவதும் நடைமுறை படுத்த வேண்டும். 3). பலமுறை உச்ச நீதிமன்ற பல நீதிபதிகள் சொல்லியும் மத்திய அரசு இதை நாடு முழுவதும் நடைமுறை படுத்த தயக்கம் காட்டி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. 4). ஒட்டு அரசியல் தான் தடுக்கிறது போல் தோன்றுகிறது.


RK
ஜூலை 21, 2026 17:24

தமிழ்நாடு பொது சிவில் சட்டத்தை அன்புடன் வரவேற்கிறது.


AaaAaaEee
ஜூலை 21, 2026 19:21

டமில் நாடுள்ள பாய் மற்றும் ஜோசப் விடமாட்டாங்கடா அம்பி


புதிய வீடியோ