உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கழுதை பால் விற்ற கம்பெனிக்கு சீல்

கழுதை பால் விற்ற கம்பெனிக்கு சீல்

விஜயநகரா: வர்த்தக அனுமதி பெறாமல், கழுதை பால் விற்பனை செய்த, ஆந்திரா நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.விஜயநகராவின் ஹொஸ்பேட் டவுனில், ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு, 'ஜென்னி பால்' என்ற பெயரில், நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு கழுதை பால் விற்பனை செய்யப்பட்டது. அதிக விலைக்கு பால் விற்பனை செய்யப்படுவதாக, ஹொஸ்பேட் நகரசபை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. நேற்று முன்தினம் இரவு, அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.வர்த்தக அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக நிறுவனம் செயல்பட்டது தெரிந்தது. இதனால் நிறுவனத்தை பூட்டி, அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இந்த நிறுவனத்தினர் ஆந்திராவில் இருந்து கழுதைகளை கொண்டு வந்து, ஹொஸ்பேட் விவசாயிகளுக்கு விற்பனை செய்து உள்ளனர்.கழுதை பால் விற்பனை செய்யும், விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு 2,000 ரூபாய் கொடுத்ததும் தெரிந்தது. இந்த நிறுவனத்திடம் இருந்து கழுதைகளை வாங்க வேண்டும் என விவசாயிகளுக்கு, விஜயநகரா மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !