உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - சீனா இடையே போட்டி இருக்கலாம்; மோதல் கூடாது: ஜெய்சங்கர்

இந்தியா - சீனா இடையே போட்டி இருக்கலாம்; மோதல் கூடாது: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: “இந்தியா - சீனா இடையே பல்வேறு விஷயங்களில் போட்டி மனபான்மை இருக்கலாம்; ஆனால், அது மோதல் போக்காக மாற வேண்டிய தேவையில்லை,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.டில்லியில் உள்ள ஆசிய அமைப்பின் நிகழ்வில் நேற்று அவர் பங்கேற்று பேசியதாவது: நம் அண்டை நாடான சீனாவுடன், 1962ல் போர் நடந்தது. அது முடிந்து, 14 ஆண்டுகளுக்குபின் நம் நாட்டிற்கு சீனா துாதரை அனுப்பியது.நம் நாட்டின் பிரதமர், சீனாவுக்கு செல்ல கூடுதலாக 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. 1988 முதல் 2020 வரை இரு நாட்டு எல்லைகளுக்கும் இடையே மோதல் நீடித்தது. ஆனால், ரத்தக்கறை படியவில்லை. எனினும், 2020ல் நடந்த மோதல் இருநாடுகளுக்கு இடையேயான உறவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஒப்பந்தங்களை மீறியதாக அமைந்தது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்தியா - சீனா இடையே உறவில் முன்னேற்றமான போக்கு நிலவி வருகிறது. இருதரப்பும் பரஸ்பரம் விருப்பத்தின்படி, உறவை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சீனாவுடன், நாம் பல்வேறு விஷயங்களில் வேறுபட்டு இருக்கலாம். இது, இரு நாடுகளுக்கும் இடையே போட்டி மனப்பான்மையாக இருக்கலாமே தவிர, அது மோதல் போக்காக மாற வேண்டிய தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

अप्पावी
மார் 27, 2025 17:33

சீக்கிரம் போய் டீ குடிச்சிட்டு சீன இறக்குமதியை ரெட்டிப்பாக்குங்க. இந்தப் பக்கம் ஆத்மநிர்பார்னு ஜல்லியடிங்க.


நிக்கோல்தாம்சன்
மார் 27, 2025 08:14

சரிதான் தல


Narayanan Muthu
மார் 27, 2025 07:57

இன்னுமொரு முக்கியமான விஷயம் சீனாவின் அத்துமீறல் அடாவடியை கண்டுக்காமல் போகணும். அதாவது பதுங்கனும்.


अप्पावी
மார் 27, 2025 07:05

வெள்ளைக் கொடி காமிச்சாச்சு. விரைவில பச்சைக்கொடி.


Kasimani Baskaran
மார் 27, 2025 05:12

சீனா மிரட்டி காரியம் சாதிப்பவர்கள்... ஆகையால் இந்தியா பதிலுக்கு மிரட்டுவதை விட முதலில் அடித்து அனுப்பவேண்டும்.


புதிய வீடியோ