உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண்பாட்டு பாசறை 26ல் போட்டிகள்

பண்பாட்டு பாசறை 26ல் போட்டிகள்

தங்கவயல்; நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில் வரும் 26ம் தேதி திருக்குறள் ஒப்புவித்தல், நடன போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.பாசறை நிர்வாகிகள் வெற்றி சீலன், அகஸ்டின், கோவலன் ஆகியோர் கூறியதாவது:தங்கவயலில் ஆண்டுதோறும் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை அமைப்பு சார்பில், தங்கவயலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதேபோல நடப்பாண்டின் நிகழ்வாக இம்மாதம் 26ம் தேதி காலை 9:00 மணிக்கு மாணவர்களுக்கான போட்டிகள், ராபர்ட்சன்பேட்டையில் தங்கவயல் நீதிமன்றம் அருகே உள்ள மொய்து மஹால் மண்டபத்தில் நடத்தப்படுகின்றன.திருக்குறள் ஒப்புவித்தல், மாறுவேடம், பாரம்பரிய கலாசார நாட்டிய நடனம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாலை 4:00 மணிக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை