உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  உன்னாவ் பாலியல் குற்றவாளி விடுவிப்பு சி.பி.ஐ., விசாரணை அதிகாரி மீது புகார்

 உன்னாவ் பாலியல் குற்றவாளி விடுவிப்பு சி.பி.ஐ., விசாரணை அதிகாரி மீது புகார்

புதுடில்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து, குற்றவாளி குல்தீப் சிங் செங்கார் விடுவிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரி மீது பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயாரும் புகார் அளித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் கடந்த 2017ல் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக குல்தீப் சிங் செங்கார் பதவி வகித்தார். வன்கொடுமை உன்னாவில் உள்ள அவரது வீட்டிற்கு வேலை கேட்டுச் சென்ற 16 வயது சிறுமியை, அவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, காரில் சென்ற சிறுமி விபத்தில் சிக்கினார். இதில், அவருடன் பயணித்த உறவினர் உயிரிழந்தார். வழக்கை விசாரித்த டில்லி நீதிமன்றம் குல்தீப் சிங், குற்றவாளி எ ன, 2019ல் தீர்ப்பு அளித்தது. அவர் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனக் கூறி ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்தது. அத்துடன் ஜாமி னும் வழங்கியது. டில்லி உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சி.பி.ஐ., உயரதிகாரிகளை சந்திக்க பாதிக்கப்பட்டவரும், அவரது தாயாரும் நேற்று டில்லி சென்றனர். விடுமுறை என்பதால், உயரதிகாரிகளை சந்திக்க முடியாத நிலையில், அதற்கு அடுத்த கட்டத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து, புகார் மனு ஒன்றை அளித்தனர். நெருக்கடி அதில், 'விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரியும், நீதிபதியும் கூட்டுச் சேர்ந்து சதி செய்து விட்டனர். இருவரும் குற்றவாளி பக்கம் சாய்ந்து விட்டனர். 'நெருக்கடியான தருணத்தில் எங்களுக்கு துணையாக நிற்கவில்லை. எங்களது வழக்கறிஞருக்கு சி.பி.ஐ., பக்கபலமாக இருந்திருந்தால், வழக்கில் நாங்கள் நிச்சயம் வென்று இருப்போம்' என தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., உயரதிகாரிகளை சந்திக்க, டில்லியிலேயே காத்திருக்கப் போவதாகவும் இருவரும் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ