மேலும் செய்திகள்
மாடலிங் பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
31-Jan-2025
ஷிவமொக்கா : ஷிவமொக்கா பத்ராவதி சீகேபாகி பகுதியில் ஓடும் பத்ரா ஆற்றில் இருந்து, சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் தொடர்ந்து புகார் செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு சீகேபாகி கிராமத்தில், கனிம வள அதிகாரி ஜோதி தலைமையில் போலீசார் 'ரெய்டு' நடத்தினர்.அப்போது மொபைல் போனை எடுத்துக் கொண்டு, ஜோதியின் அருகில் வந்த ஒருவர், 'அண்ணன் பேசுகிறார். அவரிடம் பேசுங்கள்' என்று கொடுத்தார். மொபைல் போனை வாங்க மறுத்த ஜோதி, “யாராக இருந்தாலும் என் மொபைல் போனுக்கு பேச சொல்லுங்கள்,” என்றார்.அப்போது மொபைல் போனில் லைனில் இருந்த ஒருவர், ஜோதியை ஆபாசமாக திட்டினார். இதனால் ஜோதி, மொபைல் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.ஜோதியை ஆபாசமாக திட்டிய ஆடியோ, நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. ஆபாசமாக பேசியவர் பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சங்கமேஸ்வர் மகன் பசவேஸ் என்று கூறப்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். நேற்று மதியம் பத்ராவதி பழையநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, தன்னை ஆபாசமாக திட்டியது குறித்து ஜோதி புகார் அளித்தார். அந்த புகாரின்படி 7 பேர் மீது வழக்கு பதிவானது. ஜோதியை ஆபாசமாக திட்டியதாக, அஜய், 28, ரவி, 38, மகேஷ், 34, ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.ஜோதி கூறுகையில், “புகாரில் அனைத்து தகவலையும் அளித்துள்ளேன். ஆனால், புகாரில் பசவேஸ் பெயர் இல்லை. எம்.எல்.ஏ., மகன் என்னை ஆபாசமாக திட்டினாரா என்பது எனக்கு தெரியாது. மணல் அள்ளும் இடத்திற்கு சோதனைக்கு சென்றபோது, லாரி ஏற்றி என்னை கொல்லும் முயற்சி நடந்தது. இதனால் பயத்தில் அங்கிருந்து புறப்பட்டு வந்தேன்,” என்றார்.
31-Jan-2025