உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனாதிபதி பற்றி சோனியா தவறான கருத்து; பீஹார் கோர்ட்டில் வழக்கு

ஜனாதிபதி பற்றி சோனியா தவறான கருத்து; பீஹார் கோர்ட்டில் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பீஹாரில் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. பார்லிமென்ட் நடவடிக்கைகள் முடிந்ததும் வெளியில் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவிடம், ஜனாதிபதி உரை குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், “ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் படித்ததால், பாவம் உரையின் இறுதியில் ஜனாதிபதி சோர்வாக காணப்பட்டார்,” என்றார். சோனியா அருகில் இருந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதை குறிக்கும் வகையில், 'நோ கமென்ட்ஸ்' என கூறினார். இந்நிலையில், சோனியாவின் இந்த கருத்துக்கு ஜனாதிபதி மாளிகை, பிரதமர் மற்றும் பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு, 'ஜனாதிபதி உரை நிகழ்த்தியபோது எந்த இடத்திலும் சோர்வடையவில்லை. உண்மையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்காக உரையாற்றுவது சோர்வை உண்டாக்காது' என ஜனாதிபதி மாளிகை விளக்கம் அளித்து இருந்தது.இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பீஹாரில் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் ஓஜா, சோனியாவுக்கு எதிராக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய கோரி புகார் அளித்தார்.பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில், 'இது நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரிக்கு அவமரியாதை. ராகுல் மற்றும் பிரியங்கா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். சோனியா கருத்து குறித்து நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக பிப்ரவரி 10ம் தேதி நீதிமன்றம் விசாரிக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sampath Kumar
பிப் 02, 2025 16:41

ரீல் திரும்ப திரும்ப ஓடினாள் தேய்ந்து அந்த போகும் அதை தான் அப்பிடி சொல்லி ள்ளார் இதுக்கும் கேஸ் ஜனாதி பத்தியை அவர் ஒன்றும் அவமதிக்க வில்லை பிஜேபி காரனுக்கு சாக்கு வேணும் நொண்டி குதிரைக்கு சருகுனா சாக்கு என்பது போல போவியா


Barakat Ali
பிப் 02, 2025 14:42

வாய்க்கொழுப்பால அநாகரிக பேச்சு .....


பேசும் தமிழன்
பிப் 02, 2025 14:38

இத்தாலி அம்மையாருக்கு.... தான் ஏதோ மன்னர் பரம்பரையில் வந்தவர் என்று நினைப்பு..... அதனால் தான் யாரையும் எடுத்தெறிந்து பேசி வருகிறார்.


நிக்கோல்தாம்சன்
பிப் 02, 2025 12:34

சோனியா கட்சியினால் தெரிந்து எடுக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மேஜை நாற்காலி என்று எல்லாவற்றையும் எடுத்து கொண்டு செல்லுகையில் சும்மா இருந்த வெளிநாட்டு பிரஜை இப்போ வார்த்தைகளை விட்டிருப்பது வேதனைக்குரியது


sundarsvpr
பிப் 02, 2025 11:23

நீதிமன்றம் எவ்வாறு தீர்ப்பு வழங்கும் என்று கூறமுடியாது. பேசியது குற்றம் என்றுகருதினால் இதே கருத்தை சாதாரண மனிதர் கூறிருந்தால் சோனியாவிற்கும் சாதாரண மனிதனுக்கும் ஒரே தண்டனை வழங்கினால் சரியாக இருக்காது. நீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ளலாம். சோனியா பிறப்பால் பாரத தேசத்தினரை சார்ந்தவர் அல்ல என்பதனை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளலாம்.


T.sthivinayagam
பிப் 02, 2025 10:43

ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களை பிரதமர் மோடி ஜி அவர்களூம் அவர்களது கட்சியினரும் மீண்டும் மீண்டும் பட்டியளின பெண்ணுயை ஜனாதிபதி ஆக்கியுள்ளோம் என்று சொல்லிகாட்டுவது உயர்மட்ட ஆதிக்கத்தையே காட்டுகிறது என்று மக்கள் கூறுகின்றனர்


Kasimani Baskaran
பிப் 02, 2025 11:43

சவால் விடுகிறோம்.. திமுக தலைமை என்றாவது பட்டியலினத்தவர்களுக்கு கொடுக்கப்படுமா? குறைந்தபட்சம் நல்ல சேராவது போடுகிறார்களா?


Kasimani Baskaran
பிப் 02, 2025 10:11

ஜனாதிபதியைப் பார்த்து பூவர் திங் என்று சொல்லி பரிதாபப் படுமளவுக்கு இவருக்கு அப்படி என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.


அப்பாவி
பிப் 02, 2025 09:00

உற்சாகமா தினசரி வெளியே பெண்களையும், விவசாயிகளையும் சந்திக்கச் சொல்லலாம். சோர்வு இருக்கா இல்லியான்னு தெரிஞ்சுரும்.


Ganapathy
பிப் 02, 2025 12:05

விவசாயிகளை பத்தி ரொம்ப புளுகுது..


அப்பாவி
பிப் 02, 2025 08:58

ஒருத்தரைப் பாத்து டயர்டா இருக்கீங்களேன்னு கேட்டா உடனே வழக்கு பாயும்.


GMM
பிப் 02, 2025 08:46

நீதிமன்றம் தானே முன் வந்து வழக்கு விசாரணை செய்து தண்டிக்க வேண்டும். மத்திய அரசு செய்தால், அரசியல் ஆகும். ஜனாதிபதி அவர்கள் மற்றும் கவர்னர் பற்றி விமர்சனம் கூடாது. இதனை அனுமதிக்க கூடாது. பிறர் வழக்கு தொடுக்க கூடாது. நீதிமன்றம் தானே விசாரிக்க கடமை பட்டுள்ளது.


புதிய வீடியோ