அதிகாரிகள் மீது புகார்கள்
முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:துணை கலெக்டர், கூடுதல் கலெக்டர் மற்றும் துணைப் பதிவாளர் அலுவலகங்களில் உள்ள குறைகள் குறித்து பல புகார்கள் வந்துள்ளன.எனவே, இந்த மூன்று அலுவலகங்களிலும் புகார் பெட்டிகள் நிறுவப்படும். அதேபோல, சாதாரண மக்கள் கூட தங்கள் குறைகளைத் தெரிவிக்க உதவி எண் விரைவில் அறிவிக்கப்படும். இந்த எண்ணை தொடர்பு கொண்டு குறைகளைக் கூறலாம் அல்லது 'வாட்ஸாப்' வாயிலாகவும் இந்த எண்ணில் புகாரை பதிவு செய்யலாம்.இந்த புகார் பெட்டிகள் மூலம் மக்கள் தங்கள் குறைகளை எனக்கு நேரடியாக அனுப்ப முடியும். எந்தத் துறையிலும் ஊழல் பொறுத்துக் கொள்ளப்படாது. மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் முறை விரைவில் உருவாக்கப்படும்.