உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளோடு எம்.பி.,க்களை ஒப்பிடுவதா?: காங்கிரஸ் விமர்சனத்துக்கு பா.ஜ., எதிர்ப்பு

பயங்கரவாதிகளோடு எம்.பி.,க்களை ஒப்பிடுவதா?: காங்கிரஸ் விமர்சனத்துக்கு பா.ஜ., எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'நம் எம்.பி.,க்கள் உலகத்தை சுற்றிக் கொண்டிருக்கின்றனர். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இங்கு சுற்றிக் கொண்டிருக்கின்றனர்,'' என, காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ., 'இந்தியாவின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்துக்கு விளக்கி வரும் எம்.பி.,க்களையும், பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் இணைத்து பேசுவது கொடூரமான ஒப்பீடு' என்று தெரிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை வாயிலாக, நம் ராணுவம் பதிலடி கொடுத்தது.பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கையை சர்வதேச நாடுகளிடம் அம்பலப்படுத்துவதற்காக, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுவினர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

ஒரு மாதம்

இந்நிலையில், காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது: கடந்த ஏப்., 22ல் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இன்னும் வெளியில் சுற்றுகின்றனர். கடந்த 2023 டிசம்பரில் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. 2024 அக்டோபரில் கந்தேர்பால் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அதே மாதம் மற்றொரு பயங்கரவாத தாக்குதலும் நடந்தது. இந்த அனைத்தையுமே, ஒரு பயங்கரவாத அமைப்பு தான் நடத்தியுள்ளது. பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தான், கடந்த 18 மாதங்களில் நடந்த நான்கு தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர் என்று தெரிகிறது. ஆனாலும், இன்னும் கைது செய்யப்படாமல் அவர்கள் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர். நம் எம்.பி., க்கள் உலகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளோ, இங்கு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர்.நாங்கள் எங்கள் கேள்விகளை மிக தீவிரமாக கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அரசு தரப்போ, எங்கள் கேள்விகளுக்கு எந்த பதிலையும் தராமல் உள்ளது. மாறாக, காங்கிரசை குறிவைத்துதான் பா.ஜ., செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு கூறியிருப்பதற்கு பதிலடி தரும் விதமாக, பா.ஜ., செய்தி தொடர்பாளர் ெஷஷத் பூனாவாலா கூறியிருப்பதாவது:மிக மிக கொடூரமான ஒப்பீட்டை ஜெய்ராம் ரமேஷ் செய்துள்ளார். பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை சர்வதேச நாடுகள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்காகவே நம் எம்.பி.,க்கள் சென்றுள்ளனர். அவர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது கண்டிக்கத் தக்கது.

'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'

நம் ராணுவ தளபதியை தெரு ரவுடி என்றது, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும் துல்லிய தாக்குதலை ரத்த வியாபாரம் என்றது, ஆப்பரேஷன் சிந்துார் என்பது ஒரு சிறு நடவடிக்கை என கூறியது உட்பட பலமுறை, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் காங்கிரஸ் அவதுாறாக கருத்து தெரிவித்து வருகிறது. தற்போது சர்வதேச அளவிலான நடவடிக்கைளை இந்தியா எடுக்கும்போது, அதிலிருந்து பாகிஸ்தானை காப்பாற்றுவதற்காக நம் எம்.பி.,க்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பீடு செய்கிறது காங்கிரஸ். இதன் வாயிலாக அனைத்து எல்லைகளையும் காங்கிரஸ் மீறியுள்ளது. இதுதான் காங்கிரசின் மனநிலை என்றபோதும், இதுகுறித்து பார்லிமென்ட் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
மே 30, 2025 16:50

ரொம்ப ஓவர். கிரிமினல் பேக் கிரவுண்ட் இருக்கிறவங்கன்னு மரியாதையா சொல்லணும்.


venugopal s
மே 30, 2025 11:20

இப்படி எல்லாம் அசிங்கப்படுத்தினால் அப்புறம் பயங்கரவாதிகளுக்கு கோபம் வந்து விடும்!


வேணு
மே 30, 2025 08:50

இதையெல்லாம் இன்னமும் அரசாங்கம் கேட்டுக் கொண்டு இருப்பதை கண்டு இந்தியனின் மனம் கொதிக்கிறது ஆனால் ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தையே விலை பேசும் கேவலம் இங்கு தான் பார்க்கிறோம் தேசபக்தி என்று ஒன்று இருக்க வேண்டும் அவமானம்


Keshavan.J
மே 30, 2025 08:42

அப்போ நீங்கள் 4 பேரை பரிந்துரை செய்திர்களே அவர்கள் எல்லாம் தீவிரவாதிகளா


D Natarajan
மே 30, 2025 07:47

காங்கிரெஸ் என்றாலே பைத்தியக்கார கூட்டம். கொஞ்சம் கூட நாட்டுப்பற்று இல்லாதவர்கள்


Naga Subramanian
மே 30, 2025 07:45

இப்படி நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்களை எவ்வாறெல்லாம் போற்றலாம் மக்களே? சொல்லுங்களேன்


ஆரூர் ரங்
மே 30, 2025 07:42

9000 அப்பாவி சீக்கியர்களை வேட்டையாடிய கிரிமினல்கள் காங்கிரசின் பாதுகாப்புடன் இங்கே உலாவிக் கொண்டிருக்கிறார்கள் ஜெய்ராம்.


Naga Subramanian
மே 30, 2025 07:20

....பூஜிக்கப்படவேண்டியவர்கள் இவரைப் போன்றோர்.


R SRINIVASAN
மே 30, 2025 07:18

இந்த ஜெயராம் ரமேஷ், மல்லிகார்ஜுன கார்கே, கபில் சிபல் போன்றவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசித் திரிகிறார்கள். காரணம் மோடிஜி ஆட்சியில் இவர்களால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. இவர்களுடைய கோமாளித்தனத்தை மக்கள் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் எவனாவது ஒருவன் ஜிடிபியை பத்ரியோ அல்லது பாரின் EXCHANGE RESERVE பத்ரியோ அல்லது இன்கம் TAX சட்டத்தை பத்ரியோ பேசுகிறாநா


Minimole P C
மே 30, 2025 08:15

Modi is honest and he really serves for nation and brought upIndia in fronts like GDP, Foreign Reserve, making all GOIs undertakings like ISRO, DRDL, to do well. But Cong. shown only corruption to India and its people.


Naga Subramanian
மே 30, 2025 06:14

இவ்வாறு பேசுபவர்கள் நமது பழைய ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை