உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளுக்கு கண்டனம்: காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்

பயங்கரவாதிகளுக்கு கண்டனம்: காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , அம்மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.காஷ்மீரின் பஹல்காமில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காஷ்மீரில் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பயங்கரவாதிகளுக்கும், தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும், வர்த்தக அமைப்புகளும் இதற்கு ஆதரவு அளித்தன. இப்போராட்டம் முழு வெற்றி பெற வேண்டும் எனக்கூறியிருந்தன.இதனையடுத்து மாநிலம் முழுதும் இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால், அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால், ஆள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மாநிலம் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வர்த்தக சங்கத்தினர் கூறுகையில், ' நேற்று மனதை வலிக்கும் வகையில் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடக்கிறது. அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மனிதநேயத்திற்கு எதிரான மரணம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக உள்ளோம் என்றனர்.சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், இது மிகப்பெரிய தாக்குதல். சோகத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற தாக்குதல் நடந்து இருக்கக்கூடாது. காஷ்மீரில் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு உள்ளூர் மக்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்றார்.ஸ்ரீநகரில் வசிக்கும் ஆஷிக் ஹூசைன் கூறியதாவது: பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது என்ற செய்தி நல்ல விஷயம் அல்ல. இது மனிதநேயத்திற்கு எதிரானது. இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நடக்கிறது என தெரியவில்லை. சுற்றுலா உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது நடந்தது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உலகம் முழுதும் பெயர் கெட்டு போய் உள்ளது. இது போன்று மீண்டும் தாக்குதல் நடக்கக்கூடாது. இது முற்றிலும் கண்டனத்திற்கு உரியது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Madras Madra
ஏப் 23, 2025 14:10

இது ARTICLE 370 நீக்கியதன் விளைவு மனதுக்கு ஆறுதல் தரும் திருப்பம் நல்ல மிதவாத இஸ்லாமியர்கள் இயல்பு வாழ்க்கையை விரும்ப ஆரம்பித்து உள்ளது தொடர வேண்டும்


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 23, 2025 13:49

எங்கே இருக்கான் அந்த அருவெறுப்பான அசிங்கம் பிடித்த அசாதுதீன் ஓவைசி. ஜெய் பாலஸ்தீன் என நமது மக்களவையிலே கத்தியவன் இவன், இவனை முதலில் இஸ்ரேலுக்கு நாடு கடத்த வேண்டும்.


arunachalam
ஏப் 23, 2025 13:25

ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்


skrisnagmailcom
ஏப் 23, 2025 12:53

இதுகாறும் கஷ்மீர் அரசியல் கட்சிகளும் மற்ற பிரிவினைவாத அமைப்புகளும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு நிலைப்பாடு வைத்திருந்தார்கள் இப்போது கண்டனம் தெரிவிப்பதோடு அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். இது ஒரு நல்ல திருப்பம்


Ramesh Sargam
ஏப் 23, 2025 12:32

யோகி ஆதித்யநாத் காஷ்மீர் முதல்வராக இருந்திருந்தால், இந்நேரம் JCB மூலம் அந்த தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் வீடுகள் தரைமட்டமாக ஆக்கப்பட்டிருக்கும்.


முக்கிய வீடியோ