மேலும் செய்திகள்
கருணாநிதி மாடு பிடி வீரரா : சீமான் கேள்வி
2 hour(s) ago | 2
பல நோய்களுக்கு காரணம் செயற்கை உரம்: அமித்ஷா பேச்சு
3 hour(s) ago | 2
3,500 கிமீ தூரம் செல்லக்கூடிய கே4 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி
3 hour(s) ago | 2
புதுடில்லி, லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோரின் மகன்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஏப்., - மே மாதங்களில், 18வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் தேதி விரைவில் வெளியாக உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை, சமீபத்தில் காங்., வெளியிட்டது. அதில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதில், கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை, காங்., நேற்று வெளியிட்டது. இதன்படி, அசாம் 13, மத்திய பிரதேசம் 10; ராஜஸ்தான் 10, குஜராத் ஏழு; உத்தரகண்ட் மூன்று மற்றும் யூனியன் பிரதேசமான டாமன் மற்றும் டையு, ஒன்று என, மொத்தம் 44 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அசாம் முன்னாள் முதல்வரான, மறைந்த தருண் கோகோய் மகன் கவுரவ் கோகோய், 2019 லோக்சபா தேர்தலில், கலியாபோர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இம்முறை ஜோர்ஹட்டில் களமிறங்குகிறார். ம.பி., முன்னாள் முதல்வர் கமல்நாத், தன் மகன் நகுல்நாத்துடன், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சிந்த்வாரா தொகுதியில் நகுல்நாத் போட்டியிடுவார் என, காங்., வெளியிட்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தானில், முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், கடந்த தேர்தலில் ஜோத்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், இம்முறை, ஜலோர் தொகுதியில் களம் காணுகிறார். சமீபத்தில் பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த ராகுல் கஸ்வான், ராஜஸ்தானின் சுரு தொகுதியில் போட்டியிட உள்ளார்.
2 hour(s) ago | 2
3 hour(s) ago | 2
3 hour(s) ago | 2