உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் பாதுகாவலர்களாக மாறும் காங்கிரஸ்; பாஜ விமர்சனம்

ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானின் பாதுகாவலர்களாக மாறும் காங்கிரஸ்; பாஜ விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை ஒவ்வொரு எதிர்கொள்ளும் போது, காங்கிரஸ் தலைவர்கள் இந்திய எதிர்க்கட்சியாக இல்லாமல், இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு வழக்கறிஞர்களாக ஒலிப்பதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நிகழ்த்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆபரேஷன் சிந்தூர் மீது பல்வேறு சந்தேகங்களையும், விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றன. மேலும், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த ஒரு வாரமாக அவை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன. லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லாவின் தலையீட்டினால், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லிமென்டில் இன்று 16 மணிநேர விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்தன. இன்று விவாதம் நடைபெற இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=23fose4p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மேலும் சில சந்தேகங்களை கிளப்பியுள்ளார். நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாவது; தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே? அவர்களை அடையாளம் காணவோ, கைது செய்யாமல் இருப்பது ஏன்? பயங்கரவாதிகளுக்கு உதவிய சிலரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு என்ன ஆனது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து போதிய விளக்கம் கொடுக்கவில்லை. பல அதிகாரிகள் வேறு வேறு மாதிரியான விளக்கங்களை கொடுக்கின்றனர். பாதுகாப்பு தலைமை நிர்வாகி சிங்கப்பூரில் ஒரு அறிக்கை வெளியிட்டார். ராணுவத்தின் துணை தளபதி மும்பையில் பேசினார். இந்தோனேசியாவில் கடற்படையின் ஒரு இளநிலை அதிகாரி ஒரு கருத்தை தெரிவிக்கிறார். ஆனால், பிரதமரோ, பாதுகாப்பு அமைச்சரோ அல்லது வெளியுறவு அமைச்சரோ ஏன் ஒரு முழு அறிக்கையை கூட வெளியிடவில்லை?அரசு எதையோ மறைக்க முயலுகிறது. இது என் ஊகம் மட்டுமே, ஆனால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் தந்திரோபாய தவறுகள் நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன், இவ்வாறு அவர் கூறியுள்ளார். ப.சிதம்பரத்தின் இந்த பேச்சுக்கு பா.ஜ., மூத்த தலைவர் அமித் மால்வியா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது; மீண்டும் ஒருமுறை, காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க பார்க்கிறது. ஏன் ஒவ்வொரு முறையும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது, காங்கிரஸ் தலைவர்கள் இந்திய எதிர்க்கட்சியாக இல்லாமல், இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு வழக்கறிஞர்களாக ஒலிக்கிறார்கள்?, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Chandru
ஆக 04, 2025 09:25

Sri Modiji, this is high time these anti national thugs are booked under NSA and this sort of trend should never be encouraged.


Sivasankaran Kannan
ஜூலை 29, 2025 15:13

இது போல் கேட்கும் ஒவ்வொரு காங்கிரஸ் பொறுக்கிகளையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அமெரிக்காவையே கேள்வி கேட்பார்கள் - ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் இல்லை - அவர்கள் அவனை பாகிஸ்தானில் பிடித்ததற்கு என்ன ஆதாரம் என்று. அது போல தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இல்லை என்பதை காங்கிரஸ் களவாணிகள் சொல்வார்கள்.


ashok kumar R
ஜூலை 29, 2025 13:42

காங்கிரஸ் பத்திரமாக தீவரவாதிகலயி பாகிஸ்தானுக்கு அனுப்பி விட்டிட்டு இப்புடி பார்லிமென்டில் கேள்விகளை அடுக்குறாங்கள் பார் .


Nagarajan D
ஜூலை 29, 2025 10:00

பன்னாடை செட்டியார் நமது நாடு ருபாய் அடிக்கும் எந்திரத்தையே பாகிஸ்தானுக்கு வழங்கிய அயோக்கியர் நாட்டிற்கு உபயோகமா ஏதாவது செய்வார் என்று எதிர் பார்த்தால் எப்படி.. மொத்தத்தில் தேசதுரோகிகள் தான்


MARUTHU PANDIAR
ஜூலை 28, 2025 20:11

எந்த நாட்டிலேயாவது இப்படி எதிர்கட்சின்னு சொல்லிக்கறவனுக நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் கேள்வி கேட்டதுண்டா, கேட்க முடியுமா , எந்த நாட்டுலயாவது இப்படி நடக்குமா? இவனுவளால தான் பகைவனுக்கு துணிச்சலும் திமிரும் ஏறி மறுபடி மறுபடி உள்ள நுழையறானுங்க. பார்லிமெண்டுல இப்படி எல்லாம் விவாதம் வேணும்னு கேக்கறவனுக நம் ராணுவ கமாண்டோக்கள் தியாகத்தையும் நுட்பத்தையும்ம் கொஞ்சமாவது மதிக்கிறானுகளா? இவனுவ பயங்கரவாதிகளை விட ஆபத்தானவனுங்க.


பேசும் தமிழன்
ஜூலை 28, 2025 19:15

ஒரு வேளை அந்த பயங்கரவாதிகள்.... நம்ம சிதம்பரம் அய்யா அவர்கள் வீட்டில் பதுங்கி இருக்க வாய்புள்ளது.... இது என்னுடைய யூகம் மட்டுமெ !!!


Rathna
ஜூலை 28, 2025 18:45

சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வதில் இவங்களுக்கு நிகர் எவனுமே இல்லை. 2029 தேர்தலுக்கும் சூனியம் வைத்து தோற்பதில் குறியாக வேலை செய்கிறானுக போல.


V.Mohan
ஜூலை 28, 2025 18:45

ஏனய்யா இந்த முரணான பேச்சு? காங்கிரஸ் எம்.பி. கேட்கிறார் , பஹல்காமில் ராணுவத்திற்கு தெரியாமல் ஊடுருவியது எப்படி என்று கேட்கிறார்.... உலக மகா புத்திசாலி உங்க ஆட்சில மும்பைக்கு படகு மூலம் வந்து நிதானமாக காரிலும் ரயிலிலும் பயணம் செய்து வந்த பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை கொல்ல சாதாரண துப்பாக்கியை கொடுத்தும் உயிரை பணயம் வைத்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போலீஸ் காரர்களை கண்டு கொள்ளாமல் இருந்த கான் கிராஸ் தேச விரோதிகள், பஹல்காம் பற்றி மிகவும் வக்கிரமாக கமெண்ட் அடித்து கேள்வி கேட்கிறார்கள்.. என்னய்யா? ஒவ்வொரு அடிக்கும் ராணுவ வீரரை நிறுத்த முடியுமா, அப்படி செய்ய எவ்வளவு பேர் உங்க கட்சி தொண்டர்கள் தயாராக உள்ளனர்??. ராணுவத்திற்கு அக்னிவீரராக மனதார சேர வரும் இளைஞர்களுக்கு எவ்வளவு தூரம் பயமுறுத்தி நிலைகுலையும் வகையில் ராகுல் கான் த/பெ ராஜீவ் பெரோஸ்கான் வன்மம் நிறைந்த பேச்சு பேசினார் ??? எல்லா தீவிரவாதிகள் செயலையும் முன்பே கண்காணித்து நடவடிக்கை எடுக்கற அளவு சூப்பர் அறிவு படைத்த ஆள் உங்க திமுக டாஸ்மாக் ஏஜண்டாகத் தான் இருக்கணும். அவங்கதான் உங்க சூப்பர்மேன் இல்ல, ப.சி. அவர்களே


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜூலை 28, 2025 18:32

பாரம்பரியம் மிக்க நகரத்தார் சமூக இழுக்கு பா.சிதம்பரம்.


cpv s
ஜூலை 28, 2025 18:28

pakistan terrorist developed by indian congress in terms of money , the chidhaparam must arrested and put in the jail min 99 yrs because ha has given money priting machine to pakistan


புதிய வீடியோ