வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவன் ரொம்ப யோக்கியம். நீங்கள் எல்லாம் ஆணவத்தால் திமிர் பிடித்து ஆடியவர்கள் தானே.
ஹைதராபாத்: கடந்த 15 மாதங்களில் மக்களை மோசமான நிலைக்கு காங்கிரஸ் அரசு தள்ளி விட்டதாக பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ் குற்றம்சாட்டியுள்ளார். பி.ஆர்.எஸ்., கட்சியின் மாநில கமிட்டியின் ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கட்சி தொடங்கி 25ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கும் சூழலில், கட்சியை கட்டமைப்பதில் கவனம் செலுத்த இருக்கிறோம். இந்த நிகழ்வை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எதிராக போராடுவோம். காங்கிரஸ் அரசின் தோல்விகள் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 400 விவசாயிகள் தற்கொலை, பள்ளிகளில் 50 மாணவர்கள் தற்கொலை, ஆட்டோ ஓட்டுநர்கள், ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களிடையே எழுந்த நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 15 மாதங்களில் மக்களை மோசமான நிலைக்கு காங்கிரஸ் அரசு தள்ளி விட்டது. காங்கிரஸ் அரசு செயல்படவில்லை எனில், தெலங்கானா உரிமைகளை பாதுகாக்க, பி.ஆர்.எஸ்., தனது செயல்திட்டங்களை அறிவிக்கும், இவ்வாறு பேசினார்.
இவன் ரொம்ப யோக்கியம். நீங்கள் எல்லாம் ஆணவத்தால் திமிர் பிடித்து ஆடியவர்கள் தானே.