உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகா முதல்வர் சித்துவை நீக்க காங்கிரஸ் ஆலோசனை?

கர்நாடகா முதல்வர் சித்துவை நீக்க காங்கிரஸ் ஆலோசனை?

பெங்களூரு :'கர்நாடகாவில் நவம்பர் மாதத்தில் முதல்வர் மாற்றம் நடக்கும்' என்ற பேச்சு அடிபடும் நிலையில், சித்தராமையாவை மாற்றலாமா என்பது குறித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் மேலிடம் கருத்து கேட்க ஆரம்பித்து உள்ளது. பெங்களூரு வந்துள்ள அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை நேற்று, 30 எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்துப் பேசினர். முன்னதாக, 'சித்தராமையாவை மாற்றும்படி சுர்ஜேவாலாவிடம் வலியுறுத்துங்கள்' என, தன் ஆதரவாளர்களுக்கு துணை முதல்வர் சிவகுமார் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் பரவியதால், மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இங்கு, 2023 சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்றதும் முதல்வர் பதவிக்கு சித்தராமையா, மாநில காங்., தலைவரான சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது. மேலிடம் தலையிட்டு, 'ஆளுக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி' என, சமரசம் செய்து வைத்தது. அதன்படி, வரும் நவம்பரில் முதல்வர் பதவியை சித்தராமையா விட்டுக் கொடுக்க வேண்டும்.இதற்கிடையில், ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கடந்த மே மாதம் பிரமாண்ட சாதனை மாநாடு நடத்தப்பட்டது. இதில், லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். 'இந்த மாநாட்டால் தன் இமேஜ் அதிகரிக்கும். ஐந்து ஆண்டுகளும் முதல்வர் நாற்காலியை தக்க வைத்துக் கொள்ளலாம்' என்று, சித்தராமையா நினைத்திருந்தார். ஆனால், அவரது எதிர்பார்ப்பு தலைகீழாக மாறியுள்ளது. மாநிலத்தில் முதல்வரை மாற்றுவதற்கான முன்னேற்பாடுகளை, காங்கிரஸ் மேலிடம் துவக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், திடீரென முதல்வரை மாற்ற முடியாது. அதற்கு எம்.எல்.ஏ.,க்களின் ஒப்புதல் அவசியம் என்பதால், அவர்களின் நாடித்துடிப்பை தெரிந்துகொள்ள, காங்., மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை, கட்சி மேலிடம் பெங்களூரு அனுப்பி வைத்துள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரு வந்த அவர், நேற்று முதல் எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பின் நோக்கமே, முதல்வர் மாற்றம் குறித்து எம்.எல்.ஏ.,க்களின் கருத்துகளை கேட்டறிவதே என்று கூறப்படுகிறது.இதையறிந்து, உற்சாகமாகியுள்ள துணை முதல்வர் சிவகுமார், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நேற்று மட்டும் மேலிடப் பொறுப்பாளரை, 30 எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்துப் பேசினர். முன்னதாக அனைவரிடமும் மொபைல் போனில் பேசிய சிவகுமார், 'மேலிடப் பொறுப்பாளர் உங்களுடன் நேருக்கு நேர் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். அவரை சந்தித்து, உங்களுக்கு எதுவும் பிரச்னை இருந்தால் சொல்லுங்கள்' என, கூறியுள்ளார். மேலும், 'சித்தராமையாவை மாற்றும்படி மேலிடத்திடம் கேளுங்கள்' என, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு சிவகுமார் கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்படி, சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 'சித்தராமையாவை மாற்றி விட்டு, சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும்' என, வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.இதற்கிடையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பெங்களூரில் நேற்று பேட்டி அளித்தபோது, ''மாநிலத்தின் தலைமை மாற்றம் குறித்து மேலிடம் முடிவு செய்யும். முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம், கட்சி மேலிடத்திடம் மட்டுமே உள்ளது. மேலிடத்தின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்,'' என்றார். கார்கேவின் இந்த பேட்டியும், முதல்வர் மாற்றம் நடக்கும் என்பதை உறுதிப்படுத்துவது போல இருப்பதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Iyer
ஜூலை 01, 2025 22:15

இனியாவது கர்நாடக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியை ராஜ்யத்திலிருந்து விரட்டி அடிப்பார்கள் என நம்புகிறேன்


V.Mohan
ஜூலை 01, 2025 18:16

கிறிஸ்துவரான இவர் தனது பெயரை மாற்றட்டும் அல்லது இந்துகடவுள் பெயரை சேர்த்து தனது கிறிஸ்துவ அடையாளத்தை தெரிவிக்கட்டும். மிகவும் அடாவடியாக இந்துக்கள். பற்றி கமெண்டுகள் அடிப்பதை நிறுத்தட்டும். இந்துக்கள் என்றால் பாஜக என்பது போன்ற இவரது கருத்துக்கள் அறிவுக்குறைவானது என்பது இவருக்கு யாராவது சொன்னால் தேவலை. கர்நாடகாவில் தொழிலாளர்கள் 12 மணி நேரம் செய்ய வேண்டும் என்கிற சட்டடத்திருத்தம் இண்டி கூட்டணியினர் ஒப்பதல் தந்தால் தொழிலாளர் நிலைமை அம்போ தான்


V.Mohan
ஜூலை 01, 2025 17:51

கிறிஸ்துவரான சித்தராமையா தனது பெயரை மாற்றிட்கொள்ளாமல் இருப்பதில் இருந்து அவரது உள்நோக்கம் தெளிவாகிறது. மிகவும் முரட்டுத்தனமான அபாவடியான ஹிந்து


sankaranarayanan
ஜூலை 01, 2025 12:51

கர்நாடக காங்கிரசில் துணை முதல்வர் சிவகுமார் முதல்வர் பதவி இந்த நவம்பரில் கிடைக்கவில்லையென்றால் ராஜினாமா செய்து பிஜெபியில் ஐக்கியமாகி கர்நாடகாவின் அடுத்த முதல்வராக ஆக்கும் திட்டம் பிரகாசமாக உள்ளதாம்


SP
ஜூலை 01, 2025 09:55

மேலிடம் என்றால் இவர் யார்? இவ்வளவு கேவலப்பட்டு இந்த கட்சியில் நீடிக்க வேண்டுமா?


Palanisamy Sekar
ஜூலை 01, 2025 09:37

மனைவி பெயரில் அரசாங்க வீடுகளை ஒதுக்கிய மாமன்னன் இந்த சித்தராமையா. இந்த ஆள்தான் குன்ஹாவை வைத்து அம்மா ஜெ மீதான தீர்ப்பை சொல்ல வைத்த நபர். இப்போது இந்த நபரின் ஊழல் உத்தமன் முகமூடி கிழியப்போகிறது. இங்கே உள்ள அதிமுக தலைகள் ஒருவர் கூட இந்த சித்துவை விமர்சிக்க மாட்டார்கள். காரணம் பெங்களூருவில் சொத்துக்கள் இருப்பதால். இந்த ஆள் போய்விட்டால் அடுத்து வருபவன் மட்டும் உத்தமனாகவா இருக்கப்போகிறான்? குடிகாரன் என்று செல்லமாக அழைக்கப்படும் இன்னொருவன் வருவான். இந்தியாவின் தலையெழுத்து இதுதான். மக்களை மயக்க தெரிந்த அரசியல்வாதிகள் இருக்கும்வரை இதுபோன்ற ஊழல்வாதிகள் ராஜ்ஜியம் கொடிகட்டி பார்க்கத்தான் செய்யும். இப்போது நடைபெறுவது மேலிடத்துக்கு மாதம் எவ்வளவு கப்பம் காட்டமுடியும் என்பதில்தான். அடுத்து சித்து வின் கோரிக்கையான நான் பதவியை விட்டு போனதும் என்மீதோ எனது மனைவியின் மீதோ நடவடிக்கையை எடுக்க மாட்டேன் என்கிற உத்திரவாதம் என்றிருக்கும். காங்கிரஸ் இந்த நாட்டின் சாபக்கேடு.


மூர்க்கன்
ஜூலை 01, 2025 13:09

கிழிஞ்ச ஸ்பீக்கரு


மூர்க்கன்
ஜூலை 01, 2025 15:01

அப்புறம் தண்டனை பெற்ற குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளியும் கூட... கூறு கெட்ட குக்கரு


jss
ஜூலை 01, 2025 09:30

இருவராலும், காங்கரசாலும் மக்களுக்கு நன்மை எதுவும் நடக்காது லஞ்சம் இல்லாமல் காரியங்கள் நடப்பதில்லை. அதனால் சித்து வந்தாலும், சிவன் வந்தாலும் நிலமை ஒன்றுதான். இலவசங்கள் கர்நாடகாவை பொருளாதார ரீதியாக பின்னுக்குத் தள்ளிவிட்டன. ஒரு நல்ல மாநிலத்தை குட்டிச்சுவராக்கெம் விந்தை காங்கிரசக்கே அறிந்த ஒன்று. ஒரே ஒரு சுகம் திமுக. இங்கு இல்லாதது.


VENKATASUBRAMANIAN
ஜூலை 01, 2025 08:05

கார்கே ரப்பர் ஸ்டாம்ப் என்பதை தெளிவு படுத்தியுள்ளார்.


Rajan A
ஜூலை 01, 2025 07:26

சும்மா காசை இறைத்து டப்பா கட்சியை வெற்றி பெற வைத்தவர் சும்மா இருப்பாரா? இங்கே கவலை இல்லை. 2036 வரை சின்னவர் ஆட்சி தான்


மூர்க்கன்
ஜூலை 01, 2025 13:10

அது


lana
ஜூலை 01, 2025 06:46

ஆமா மேலிடம் மட்டுமே முடிவு எடுக்கும். கார்கே வெறுமனே ரப்பர் ஸ்டாம்ப்


முக்கிய வீடியோ