உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு காங்., கண்டனம்

ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு காங்., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே, போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில், காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:ஈரானில் அப்பாவி மக்களையும், குடியிருப்புப் பகுதிகளையும் குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இது, பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.எனவே, வன்முறையை கைவிட்டு, சுமுக தீர்வு ஏற்பட இருதரப்பும் பேச்சு நடத்த வேண்டும். இதன் வாயிலாக மட்டுமே அமைதி பாதையில் திரும்ப முடியும்.இந்தியா, ஈரானுடன் நீண்டகால நட்புறவு கொண்டுள்ளது. சமீபகாலமாக, இஸ்ரேலுடனும் நல்லுறவை பேணி வருகிறது. எனவே, இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் போர் பதற்றத்தை தணிக்கும் பணியை, மத்திய அரசு தெளிவுடனும், பொறுப்புடனும் மேற்கொள்வது அவசியம்.மேற்காசிய நாடுகளில், லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் நம் அரசு ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பேசும் தமிழன்
ஜூன் 16, 2025 08:04

கான் கிராஸ் கட்சி ஒழிந்தால் பாதி தீவிரவாதம் ஒழிந்து விடும்... அவர்கள் தான் தீவிரவாதிகளின் பாதுகாவலர்கள்.. இவ்வளவு பேசும் இவர்... ஈரான் நாடு இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைத் ஏவிய போது எங்கே போய் இருந்தார்?? ஈரான் நடத்திய தாக்குதல் மட்டும் சரி என்று கூறுகிறாரா??


Minimole P C
ஜூன் 17, 2025 08:00

Isreal asks people of Iran leave the places where atomic research is going on. But cong. says Isreal targets people. Iran must be taught a lesson for nurturing terrorists.


vbs manian
ஜூன் 16, 2025 07:46

ஆஹா காங்கிரஸின் minority பாசம் ஜொலிக்கிறது.


ராமகிருஷ்ணன்
ஜூன் 16, 2025 06:38

அல்குவைதா காங்கிரஸ் அப்படித்தான் சொல்லும்.


Rajan A
ஜூன் 16, 2025 05:49

எதிர்ப்பு சொல்லிட்டோம். பிரியாணியும், ஓட்டும் எங்களுக்குத்தானே?


Kasimani Baskaran
ஜூன் 16, 2025 03:57

வெளியுறவுத்துறை எதிர்க்கட்சி வசமோ அல்லது மாநிலங்கள் வசமோ இல்லை. ஆகையால் தேவையற்ற அறிக்கைகளை விடுவதை இவர்கள் நிறுத்த வேண்டும். இந்தியாவை பாகிஸ்தான் அடிக்க டிரோன் கொடுத்து உதவிய நாடு ஈரான். உறுதி செய்யப்பட உளவுத்துறை தகவல்களின் அடிப்படையிலேயே இந்தியா துல்லியமான பொது மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் தாக்குதல் நடத்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான் தேசிய காங்கிரஸ் போலவே தேசவிரோத நடவடிக்கைகளை வெட்கமில்லாமல் செய்தது. சில மாநிலக்கட்சிகள் கூட அறிக்கை விட ஆரம்பித்தன. இது கண்டிக்கத்தக்க போக்கு. இந்தியாவுக்கு விரோதமாக செயல்படும் இது போல தேசவிரோத காட்சிகளை தடை செய்தால் கூட தப்பில்லை. பொதுமக்களும் கூட இத்தகைய கட்சிகளை சுளுக்கெடுக்க வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 16, 2025 03:35

புரிந்து கொள்ளுங்க தமிழக கிறுஸ்துவர்களே


RAJ
ஜூன் 16, 2025 01:45

இனிமேல் ஈரானுக்கு பிரச்சினை இல்லை. ....கான்க்ரீஸ் களத்துல... இனி இஸ்ரேல் புறமுதுகை காட்டிட்டு ஓடும்டா .. டால்டா ..


முக்கிய வீடியோ