உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரை பாராட்டியதால் கடும் அதிருப்தி: காங். எம்.பி. சசிதரூருக்கு பா.ஜ., ஆதரவுக்கரம்

பிரதமரை பாராட்டியதால் கடும் அதிருப்தி: காங். எம்.பி. சசிதரூருக்கு பா.ஜ., ஆதரவுக்கரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமரை பாராட்டிய சொந்த கட்சி எம்.பி., சசிதரூர் மீது காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருக்கும் சூழலில் அவருக்கு பா.ஜ., ஆதரவளித்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளிடம் விவரிக்கும் குழுவில் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் இடம்பெற்றுள்ளார். இத்தனைக்கும் அவரது பெயரை மத்திய அரசிடம் காங்கிரஸ் பரிந்துரை செய்யவில்லை. பனாமா சென்றுள்ள அவர், மத்திய அரசுக்கு ஆதரவாக பேசினார். அண்மைக் காலமாக சசி தரூரின் பா.ஜ.,ஆதரவு பேச்சு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியிலும், தலைமையிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. சசிதரூரின் பேச்சுகள், அவரது தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கூறி உள்ளது. பா.ஜ., செய்தித் தொடர்பாளர் போல் கருத்து தெரிவிக்கிறார் என்று மூத்த தலைவர் உதித் ராஜ் விமர்சித்து இருந்தார்.தொடர்ந்து காங்கிரஸ் தரப்பில் இருந்து சசிதரூருக்கு எதிராக விமர்சனங்கள் முன் வைக்கப்படும் சூழலில் அவருக்கு பா.ஜ., ஆதரவுக்கரம் நீட்டி இருக்கிறது. இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; காங்கிரசுக்கு என்ன வேண்டும்? நாட்டின் மீது அவர்களுக்கு என்ன அக்கறை இருக்கிறது? வெளிநாடு சென்றிருக்கும் இந்திய எம்.பி.,க்கள் பிரதமருக்கும், நாட்டுக்கும் எதிராக பேச வேண்டுமா? அரசியலில் விரக்திக்கும் ஒரு எல்லை உண்டு. இவ்வாறு கிரண் ரிஜூஜூ குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

V Venkatachalam
மே 29, 2025 18:58

பப்பு ராஜா வூட்டு கண்ணு குட்டி..அது இஷ்டத்துக்கு சுத்திண்டு இருக்கும். கான்- கிராஸ் காரனுங்க அது என்ன சொல்லுதோ அதை ரீப்ளே பண்ணிண்டு இருப்பானுங்க... இவரு அந்த ரீப்ளேய பண்ணல.. மோடியை மரண வியாபாரின்னு துஷ்ட பிரசாரம் பண்ணியவுங்க எப்புடி சசியின் பேச்சை பொறுத்துப்பாங்க? அவன்கள் வெந்து நொந்து போய் இருக்கானுங்க.


சிட்டுக்குருவி
மே 29, 2025 18:09

எந்த ஒரு சுயமரியாதை, சுய சிந்தனை, நாட்டுப்பற்று உள்ளவரும் காங்கிரஸில் இருப்பது கடினம்.நாட்டில் எவ்வளவோ ஊழல்,லஞ்சம், அரசியல் வாதிகளின் அரசு சொத்துக்கள் களவாடல் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை.எந்த தன்மானம் உள்ளவனும் பொறுத்துகொள்ளமுடியாது.இதையெல்லாம் பற்றி காங்கிரஸ் ஒரு வார்த்தைகூட பேசாதது ஏன்? ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி ஊழலில் சிக்கியிருக்கின்றார்.அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தன் எதிர்கட்சி கடமையை இதுவரைசெய்யாதது ஏன்?


Balakumar V
மே 29, 2025 16:04

Sashi Tharoor modified. India glorified


Sridhar
மே 29, 2025 14:22

பதினோரு வருசம் ஆகியும் காங்கி பயலுகளுக்கு ஆட்சி அதிகாரம் பதவி போன சோகத்தை தாங்கமுடியால. ஒவ்வொரு நொடியும் மோடியை கறிச்சு கொட்டி அவனுக வெறுப்பை காட்டறானுங்க. அதுவே எல்லைமீறி இப்போ நாட்டுமீது வெறுப்பா மாறிடுச்சு. அதுனால மோடியோ நாடோ பாராட்டப்படுவதை அவுங்களால பொறுத்துக்கொள்ளமுடியல. பாவம் அவனுகளும் என்னதான் பண்ணுவானுங்க. 60 வருசமா நம்ம சொத்துனு நினைச்சது கைவிட்டுப்போனா வருத்தமாதானே இருக்கும்


Kumar Kumzi
மே 29, 2025 13:58

இவரை போன்ற தேசப்பற்று உள்ளவர்கள் பாஜாகாவில் இருப்பதே நாட்டுக்கு நல்லது


lana
மே 29, 2025 12:10

எங்க பப்பு மாதிரி வெளி நாட்டுக்கு போனால் இந்தியாவை பற்றி குறை சொல்ல வேண்டும். இப்படிக்கு Italy காங்


baskkaran Kg
மே 29, 2025 11:59

கட்சி பேதம் இருந்தாலும் நாடு என்று வரும்போது தரூர், owiasi போன்றோர் நாடு ஒற்றுமைக்காக இருப்பது இந்த கான்கிரஸ்க்கு வயிறு எறிகிறதா


Ramesh Sargam
மே 29, 2025 11:56

ஒரு நாட்டின் பிரதமரை பாராட்டுவது ஒரு தவறா? பிரதமர் அங்கம் வகிக்கும் கட்சியை பாராட்டவில்லை. பிரதமரின் செயலைத்தான் அவர் பாராட்டி இருக்கிறார். பிரதமர் செய்த செயல் நம் நாட்டை உலுக்கிய அந்த பயங்கரவாதிகளின் மீதான தாக்குதல். அந்த செயலை எல்லா கட்சியினரும் பாராட்டவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை