உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசாமில் அமைதி ஏற்படுவதை காங்., விரும்பவில்லை: அமித்ஷா

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்., விரும்பவில்லை: அமித்ஷா

கவுகாத்தி: '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.அசாமில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: அசாமில் 10 ஆயிரம் இளைஞர்கள் ஆயுதங்களை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் அமைதி திரும்பி உள்ளது. அசாமிற்கு 3 லட்சம் கோடி உள்கட்டமைப்பு திட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. கூடுதலாக, சமீபத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு முதலீடு கிடைத்து உள்ளது.அசாமில் அமைதி நிலவ காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. பிரதமர் மோடி அமைதியை நிலைநாட்டியதுடன், உள்கட்டமைப்பை வளர்த்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுவதை உறுதி செய்துள்ளார். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் அசாமிற்கு ரூ.1.27 லட்சம் கோடி நிதி ஒதுக்கியது. பிரதமர் மோடி ஆட்சியில் இந்த தொகையானது நான்கு மடங்கு அதிகரித்து ரூ.4.95 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.அசாமை புறக்கணித்து, அமைதி, வளர்ச்சியை ஏற்பட காங்கிரஸ் அனுமதிக்காதது ஏன்?பிரதமர் மோடி ஆட்சியில் அனைத்தும் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மார் 15, 2025 20:51

ரூ. 3,500 லஞ்சம் வாங்கியவன் குளத்தில் குதிக்கிறான். லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குபவர்கள் அந்த பசிபிக், அட்லான்டிக் சமுத்திரத்தில் குதித்து சாகவேண்டியவர்கள். ஆனால் எனக்கென்ன ஒரே கவலை. இந்த அசுத்தமானவர்கள் அந்த சமுத்திரத்தில் குதித்து, அந்த சமுத்திரம் அசுத்தமாக வேண்டுமா...?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை