உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல்கள் முறையாக நடக்கிறதா: கண்காணிக்க குழு அமைத்தது காங்கிரஸ்

தேர்தல்கள் முறையாக நடக்கிறதா: கண்காணிக்க குழு அமைத்தது காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; தலைமை தேர்தல் ஆணையம், தேர்தல்களை ஒழுங்காக நடத்துகிறதா என்பதை கண்காணிக்க 8 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு EAGLE என்று பெயரிடப்பட்டு உள்ளது.சட்டசபை மற்றும் பார்லி. தேர்தல்கள் ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி செய்யப்படுவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறது. தலைமை தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டது.இந் நிலையில் தலைமை தேர்தல் ஆணையம், அனைத்துத் தேர்தல்களையும் முறையாக, நேர்மையாக நடத்துகிறதா என்பதை கண்காணிக்க காங்கிரஸ் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து இருக்கிறது. இந்த குழுவுக்கு Empowered Action Group of Leaders and Experts (EAGLE) என்று பெயரிட்டு காங்கிரஸ் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, இக்குழுவில் அஜய் மக்கான், திக்விஜய் சிங், அபிஷேக் சிங்வி, பிரவீன் சக்ரவர்த்தி, பவன் கேரா, குர்தீப் சிங் சப்பல், நிதின் ராவத், சல்லா வம்சிசந்த் ரெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்த குழுவானது முதலில் மஹாராஷ்டிரா வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் பற்றி முழுமையாக ஆய்வு நடத்தி, அதன் அறிக்கையை கட்சி தலைமைக்கு சமர்ப்பிக்கும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

பேசும் தமிழன்
பிப் 03, 2025 19:38

உங்கள் கான் கிராஸ் கட்சியை தான் மக்கள் அனைவருக்கும் கண்காணிக்க வேண்டும்..... We எப்படியாவது கோல்மால் செய்து ஆட்சிக்கு வந்து விடலாம் என்று இத்தாலி மாஃபியா கும்பல் நினைக்கிறது...... ஆனால் நாட்டு மக்கள் அனைவருக்கும் சேர்ந்து உங்களுக்கு கண்டிப்பாக ஆப்பு வைப்பார்கள்.


baala
பிப் 03, 2025 10:57

நீங்கள் குழு அமைந்துவிட்டால்? நாங்கள் முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்.


veera
பிப் 03, 2025 08:12

இதுல யாரையோ அடிக்க போற


Kasimani Baskaran
பிப் 03, 2025 06:59

ஏதோ இதுகள் இன்னும் ஆட்சியில் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு உருட்டல், மிரட்டல் விட்டுக்கொண்டு பொழுதைப் போக்குகிறார்கள். இவர்களை நாடு கடத்த பாஜக அரசு பயப்படுவது வினோதமாக இருக்கிறது.


Indhuindian
பிப் 03, 2025 06:22

எத்தை தின்னா பித்தம் தெளியும்ங்கற கேசு ஆனா இது தெலியிர பித்தமா. இப்போ ஆரம்பிச்சாதான் டெல்லி தேர்தல் வந்த உடனே தேர்தல் கமிஷன் மேல குத்தம் சொல்லலாம். ஆட தெரியாது ஆதலால் கூடத்தும்பேர்ல குத்தம் சொல்லலாம்


Nandakumar Naidu.
பிப் 03, 2025 05:51

இந்தியாவின் தேச,சமூக மற்றும் ஹிந்து விரோத குடும்பம்.


S. Venugopal
பிப் 02, 2025 22:03

இவர்களுக்கு அத்துப்படி இல்லாத ஏதாவது ஒரு எலெக்க்ஷன் ஃபிராடு இருக்கா? ஏதாவது புதுப்புது வழிகளை கண்டுபிடிக்க இந்த கமிட்டியா?


GMM
பிப் 02, 2025 21:59

தேர்தல் முறையாக நடக்க போயிதான் 40 க்கு 40 திமுக வெற்றி பெற்றது. காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது. வாக்கு எந்திரம் மீது ஆதாரமற்ற புகார். தேர்தல் ஆணையம் மீது புகார். தற்போது தேர்தல் முறையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க காங்கிரஸ் குழு. ஓரிரு நாட்கள் நாடு முழுவதும் நடக்கும் தேர்தலை குழு எப்படி கண்காணிக்கும்.? நீதிமன்றத்தில் தினமும் விசாரணை நடக்கும். பல காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு நிலுவை. விசாரணை முறையாக நடக்கிறதா என்று கண்காணிக்க காங்கிரஸ் ஒரு குழு அமைக்கலாம். தேர்தல் பித்தம் தலைக்கு ஏறிவிட்டது.


Karthik
பிப் 02, 2025 21:50

இந்திய தேர்தல் ஆணையம் முறையாகத் தான் தேர்தலை நடத்துகிறது . அதை கண்காணிக்க அரசு அதிகாரிகள் உள்ளனர். நீங்கள் அதை கண்காணிக்க குழு அமைப்பதைவிட , உங்க கட்சியில் தேர்தல் முறையா நடைக்குதா னு பார்க்க குழு அமைக்கலாம் அல்லது கான்கிராஸ் ஆளும் மாநிலங்களில் ஆட்சி முறையாக நடக்கிறதா? அம்மாநில மக்களின் தேவைகள்/ திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என பார்க்க குழு அமைக்கலாமே. அவ்வாறு செய்தால் நீங்களும் உங்கள் கட்சியும் ஆட்சியும் ஒருசேர வளர்ந்திடுமே??


தமிழ் மைந்தன்
பிப் 02, 2025 21:33

இந்த குழுவானது முதலில் காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள குளறுபடிகள் பற்றி முழுமையாக ஆய்வு நடத்தி, அதன் அறிக்கையை ஊழல் ராகுல் மற்றும் இத்தாலி ஊழல் ராணியிடம் சமர்ப்பிக்கும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.


முக்கிய வீடியோ