உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அம்பேத்கருக்கு எதிரான கட்சி காங்., : அமித்ஷா பதிலடி

அம்பேத்கருக்கு எதிரான கட்சி காங்., : அமித்ஷா பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' அம்பேத்கருக்கு எதிரான கட்சி காங்., தான். அவர் முழங்கிய இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு, தற்போது அவரது பெயரில் அரசியல் செய்கிறது,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.டில்லியில் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் அமித்ஷா கூறியதாவது; அம்பேத்கர் விவகாரத்தில் உண்மையை மறைக்க காங்., முயற்சி செய்கிறது. இதனால் என் பேச்சின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து திரித்து குறை கூறுகின்றனர். என் பேச்சை முழுமையாக கேட்க வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xgtco087&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தரவுகளின் அடிப்படையில் மட்டுமே பார்லி.,யில் பேச முடியும். மகளிர், அரசியலமைப்பு, அம்பேத்கருக்கு எதிரான கட்சி காங்., நமது நாட்டின் தியாகிகள், ராணுவம், பெண்களை அக்கட்சி அவமதிக்கிறது. அக்கட்சி தனக்கு தானே பாரத ரத்னா விருது கொடுத்துக் கொண்டது. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு நேருவும், இந்திராவும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்., ஆட்சியை இழந்த பிறகு தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. நேரு உள்ளிட்ட காங்கிரசார் மட்டுமே அம்பேத்கரை குறைத்து மதிப்பிட்டனர். நேரு தனது புத்தகத்தில் அம்பேத்கர் பற்றிய எதிர்ப்பு இருந்தது. அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போது, பிரதமராக இருந்த நேருவுக்கு எழுதிய கடிதத்தில், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பி.சி.ராய் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், ராஜினாமாவால் அமைச்சரவை பலவீனம் அடையாது என நேரு கூறினார். காங்., அம்பேத்கரை எப்படி அவமதித்ததற்கு என்பதற்கு இதை விட வேறு உதாரணங்கள் இருக்க முடியாது. அவரின் ராஜ்யசபா பேச்சுகளை காங்கிரஸ் அழித்தது. அவரின் பிறந்த நாளைக் கூட அக்கட்சி கொண்டாடவில்லை. அம்பேத்கரின் கொள்கையை உயர்த்தி பிடிப்பது மோடி அரசு மட்டுமே. அவரை பா.ஜ., எதிர்க்கவில்லை. அவரின் புகழை உலகம் முழுதும் நிலை நாட்டினோம். பா.ஜ.,வினர் அம்பேத்கர் கொள்கையை பின்பற்றுகிறார்கள். ஆனால், அவரின் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளது.இந்தியாவை பிளவுபடுத்தும் வகையில் அந்நிய மண்ணில் இருந்து காங்கிரஸ் கருத்து தெரிவித்து வருகிறது. 1952க்கு பிறகு நடந்த இடைத்தேர்தல்களிலும் அம்பேத்கரை தோற்கடிக்க வேண்டும் என்பது காங்கிரசின் நோக்கமாக இருந்தது. இரண்டு முறை தோற்கடித்தது. அவர் முழங்கிய இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் இன்று அம்பேத்கர் பெயரில் அரசியல் செய்கின்றனர்.நான் ராஜினாமா செய்ய வேண்டும் என கார்கே சொல்கிறார். இது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால், நான் அதனை செய்வேன். ஆனால்,அத்துடன் அவரது பிரச்னை தீராது. ஏனென்றால், அடுத்த 15 ஆண்டுகள் அவர் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருக்க வேண்டி இருக்கும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

AMLA ASOKAN
டிச 18, 2024 21:47

அமித் ஷா பார்லிமென்டில் பேசும் போது பகவான் பெயரை பலமுறை உச்சரித்தால் சுவர்க்கம் கிடைக்கும் . மாறாக அம்பேத்கர் பெயரை திரும்ப திரும்ப கூறுவதால் என்ன பலன் என்று கூறியது அம்பேத்கரை கிண்டலடிக்கும் விதத்தில் தான் . தான் செய்த தவறை உணர்ந்து உடன் பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டினார். ஆனால் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் வளமை போல் காங்கிரஸ் மீது தான் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் . அம்பேத்கரை தெய்வமாக போற்றும் BC , SC , ST , DALIT பிரிவினர் மற்றும் அணைத்து மக்களும் அமித் ஷாவின் இந்த பேச்சை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் . BJP யினர் சந்தோசப்படலாம் .


GMM
டிச 18, 2024 20:53

அம்பேத்கார் எதிராக மட்டுமல்ல , தேச நலனுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் மற்றும் சில மாநில கட்சிகள் . சிறுபான்மை ஆதரவை பெற்றுவிட்டனர். தலித் ஆதரவு இருந்தால், சிறிய கட்சிகள் , காசுக்கு ஆசைப்படும் வாக்காளரை தன் வசப்படுத்தி வெற்றிக்கு திட்டமிடும் கொள்கை இல்லாத கட்சிகள் . பிஜேபி தலித் , பழங்குடி உட்பட இந்து பூர்விக குடிகளை பாதுகாக்க விரும்புகிறது. வழிபாடு, சாதி பாகுபாடு அதிகரித்து இந்துக்குள் பகைமையை காங்கிரஸ் கட்சி உருவாக்கி வருகிறது. சில சாதி ஆள்காட்டிகளை வழிகாட்டியாக பயன்படுத்துகிறது. பாலைவன வாழ்வா / சோலைவன வாழ்வா என்று மக்கள் தீர்மானிக்கும் காலம். கட்டம் தவறினால் நஷ்டம்.


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 18, 2024 20:25

சரி ஏன் இந்த அலறல் பாவம் , AI வைத்து என் பேச்சு திரித்து வெளியிடப்பட்டு உள்ளது ,ஆட்சி அதிகாரம் இவர்களிடம் யார் என்று கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே...


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 18, 2024 19:56

ஒரு கதை உண்டு, நீ எதுவும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, முன்னர் செய்தவனை குறை சொல்லிக்கொண்டே இரு, நீ எதோ செய்துவிட்டது போலவே மற்றவர்களுக்கு தெரியும்.


கொல்ட்டி பற்றாளன், ஓங்கோல் கட்டுமரநகர்
டிச 18, 2024 21:07

அந்த கதைக்கு கச்சிதமாக பொருந்தக் கூடியவர் கடடுமர கருணாநிதியேதான்


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 18, 2024 19:49

திப்பு சுல்தான் ஆங்கிலேயரை எதிர்த்து கடைசி வரை போராடினார் அனால் சாவர்க்கர் ஆங்கிலேய படைக்கு இந்தியர்களை லட்ச கணக்கில் சேர்த்து பெருமை தேடி கொண்டார்...


வைகுண்டேஸ்வரன்.V, chennai
டிச 18, 2024 20:30

திருட்டு பற்றாளர், பாத்து சூதாணமா பேசு. அவரு இட ஒதுக்கீடு 70 ஆண்டுக்கு மேல் இருக்கக் கூடாது என்று கூறினார். அப்பறம் நீ எல்லாத்துக்கும் கை ஏந்த வேண்டும்


Bala
டிச 18, 2024 21:24

யார் இந்த திப்பு சுல்த்தான்? இவருடைய முன்னோர்கள் அரபி முகல் வம்சத்தவர்கள். பல மராட்டிய இந்துக்களை கொன்று குவித்தவன் என்றும் வரலாறு உண்டு. காங்கிரஸ் கட்சி இதை மறைத்து விட்டது.


Bala
டிச 18, 2024 21:30

முன்னுத்தைம்பது ஆண்டு கால விஜய நகர இந்து சாம்ராஜ்யத்தால் தென்னிந்திய பிரதேசம் முகலாய கொடுங்கோல் ஆட்சிகளிடம் இருந்தும் ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிகளிடம் இருந்தும் காக்கப்பட்டது. இல்லாவிட்டால் என்றைக்கோ இந்துக்கள் இந்தியாவில் சிறுபான்மையினராக மாற்றப்பட்டிருப்பார்கள்


SUBBU,
டிச 18, 2024 19:06

நேரு இறந்தது 1964 ம் ஆண்டு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு 1955. இந்திராகாந்தி இறந்தது 1984 ம் ஆண்டு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு 1971. ராஜிவ் காந்தி இறந்தது 1991 ம் ஆண்டு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு 1991. சர்தார் வல்லபாய் படேல் இறந்தது 1950 ம் ஆண்டு ஆனால் அவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு 1991. அதே போல் அம்பேத்கர் இறந்தது 1956 ம் ஆண்டு ஆனால் அவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது 1990. படேல், மற்றும் அம்பேத்கர் இவர்கள் இருவருக்கு மட்டும் பாரதரத்னா விருது வழங்க காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 40 வருடங்கள் ஆகியிருக்கிறது இதிலிருந்தே காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கார் மேல் வைத்திருந்த பாசம் பற்று என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 18, 2024 19:51

பாரத் ரத்னா வழங்கி விட்டால் யோக்யர்களா , மண்டல் கமிஷனை ஏன் எதிர்த்தார்கள்


Sidharth
டிச 18, 2024 18:44

சாத்தான் ஓதும் வேதம்


ஆரூர் ரங்
டிச 18, 2024 18:36

மண்டல் கமிஷனை அமைத்தது வாஜ்பாய் அத்வானி ஆகியோர் அமைச்சர்களாக இருந்த ஜனதா அமைச்சரவை. ஆனால் மண்டல் அறிக்கையை அமல்படுத்துவதை எதிர்த்து அப்போது தீக்குளித்த நபர் காங்கிரசில் மாணவரணித் தலைவர்.


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 18, 2024 20:15

பெரிசு நீங்கள் சொன்ன பரத் ரத்னா கொடுத்தோம் :::: ஒரு பழமொழி எதாலயோ அடிசிட்டு பருப்பு சோறு போட்ட கதை தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை