மேலும் செய்திகள்
சத்தீஸ்கர் மாஜி முதல்வர் பூபேஷ் பாகல் மகன் கைது
18-Jul-2025
போர்ட் பிளேர்: காங்கிரஸ் முன்னாள் எம்.பி., தொடர்புடைய ரூ.200 கோடி கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக, அந்தமானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த முன்னாள் எம்பி குல்தீப் ராய் சர்மா; காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அந்த கட்சியின் தேசிய செயலாளராகவும் பதவி வகித்தார். இவர் போலி நிறுவனங்களை உருவாக்கி ரூ.200 கோடிக்கு மேல் கூட்டுறவு வங்கியில் கடன் மோசடி செய்து பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. அதை தொடர்ந்து அந்தமான் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.இந்த வழக்கில் நேற்று அமலாக்கத்துறை அந்தமான் தீவுகளில் முதல் முறையாக சோதனை நடவடிக்கை மேற்கொண்டது. போர்ட் பிளேர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 9 இடங்களிலும், கோல்கட்டாவில் உள்ள இரண்டு வளாகங்களிலும் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
18-Jul-2025