உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசை வழிநடத்தும் அர்பன் நக்சல்கள்: பிரதமர் மோடி தாக்கு

காங்கிரசை வழிநடத்தும் அர்பன் நக்சல்கள்: பிரதமர் மோடி தாக்கு

வாஷிம்: '' காங்கிரஸ் கட்சியை, அர்பன் நக்சல்கள் தான் இயக்குகின்றனர், '' என பிரதமர் மோடி கூறினார்.வாசிம் மாவட்டத்தில், விவசாயம் மற்றும் கால்நடைத்துறைகளில் ரூ.23 ஆயரம் கோடி மதிப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5saw3a2t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் பிறகு அவர் பேசியதாவது: பிரதமர் கிசான் சம்மன் நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 9.5 கோடி பேர் 20 ஆயிரம் கோடி நிதி பெற்றுள்ளனர். டில்லியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் முக்கிய குற்றவாளி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் விரும்புகிறது.அர்பன் நக்சல்கள் இணைந்து காங்கிரசை இயக்குகின்றனர். மக்கள் ஒன்றிணைந்து, காங்கிரசின் ஆபத்தான திட்டத்தை தோற்டிக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்தால், தங்களது திட்டம் தோல்வியடையும் என்பது காங்கிரசுக்கு தெரியும். இந்தியாவிற்கு நற்பெயர் கிடைக்ககூடாது என நினைப்பவர்களுடன் இணைந்து காங்கிரஸ் செயல்படுதை அனைவரும் பார்க்கலாம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அசத்தல்

போஹாராதேவி என்ற இடத்தில் உள்ள ஜகதாம்பா மாதா கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள பாரம்பரிய இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார்.

அஞ்சலி

தொடர்ந்து, வாசிம் மாவட்டத்தில் உள்ள துறவி சேவாலால் மகாராஜ் மற்றும் துறவி ராம்ராவ் மகாராஜ் ஆகியோரின் நினைவிடங்களிலும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார். பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார். நமோஷேத்கரி மகாசன்மன் நிதி திட்டத்தின் 5வது தவணையையும் பிரதமர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
அக் 05, 2024 20:54

அர்பன் நக்ஸல்களை ஆதரிக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். அர்பன் நக்சல்கள், காங்கிரஸ் இருவரும் இணைபிரியா நண்பர்கள். நண்பேன்டா...


தஞ்சை மன்னர்
அக் 05, 2024 20:23

யாரை பார்த்தாலும் அர்பன் நக்சல்கள் தான் தன் கட்சியை தன் ஆட்சியை யார் விமர்சித்தாலும் அவர்களும் அப்படியே நாங்க மட்டும் யோக்கியன் வேஷம் போட்டு ஊழல் செய்து கொண்டே இருப்போம்


GMM
அக் 05, 2024 19:46

காங்கிரஸ், திமுக, கேஜ்ரிவால், மம்தா, விஜயன் போன்றோரை இயக்குவது கட்சி உறுப்பினர்கள் அல்ல. எங்கிருந்து இயக்க படுகிறோம் என்று அறியாதவர்கள். ஸ்டாலின் அமைச்சர் அவை மாற்றம் பற்றி தனக்கு தகவல் வரவில்லை - குதிரில் அப்பன் யில்லை - என்று கூறி விட்டார். அர்பன் நச்சுகள் நீதி, நிதி, நிர்வாகம், அரசியலில் அதிகம் புகுந்து விட்டனர். சீர் திருத்தம் செய்து இவர்களை வீழ்ச்சி அடைய செய்ய முடியும். பிஜேபிக்கு சற்று பாதிப்பு இருக்கும். 11ம் தேதி முதல் நீதிக்கு விடிவு பிறக்க வேண்டும்.


M.Sam
அக் 05, 2024 17:04

When they are URBAN NAXALS WHO ATE YOU? You are RURAL Naxal only So both ate Naxal only Indiabs are really in a bad shape because of you people feud


Rajan
அக் 05, 2024 17:03

எந்த கோஷ்டி என்று குறிப்பிடவில்லை ஆதனால் யாரை கூறுகிறார் என்று தெரியவில்லை என்று நம்ம ஊர் ஸ்டைலில் பதில் சொல்லிவிட்டு போக வேண்டியது தான்


Lion Drsekar
அக் 05, 2024 15:58

என்னதான் கதறினாலும் 100 ஆண்டுகளாக வாழ்ந்த குடும்பங்கள் , பாரம்பரியம், அவர்களுக்கு எனவே வாழ்ந்த துறைகள், என்ன பட்டம் கொடுத்தாலும் எல்லோருக்கும் வாய் ஒன்றே மூலதனம், நாங்கள் செய்யவில்லை, பிறகு திருப்பிக்கொடுக்கிறோம், அபராதம் கட்டுகிறோம் , இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், முடிவு ஹிரண்யாய நமஹ


அப்பாவி
அக் 05, 2024 15:58

பா.ஜ வை வழிநடத்தும் க்ரீடி(greedy) கார்ப்பரேட்கள்.


Priyan Vadanad
அக் 05, 2024 15:53

மெழுகினால் செய்த சிலையும் புழுகினால் செய்த சிலையும் வெயிலேற உருகி மறையும்.


Priyan Vadanad
அக் 05, 2024 15:41

பிங்க் கலர் குல்லா ஒருநாள் கருப்பு குல்லாவையும் ஏற்கும்.


Priyan Vadanad
அக் 05, 2024 15:37

தெய்வப்பிறவி சொல்லிப்புட்டார் கேட்டுக்கோங்க. ஏதோ ஞாபக கொளரல அவருடைய கட்சிய ஆடுறவங்கள பத்தி சொல்லிடப்போறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை