உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாரபட்சமாக செயல்படும் அமலாக்க துறை; ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கடிதம்

பாரபட்சமாக செயல்படும் அமலாக்க துறை; ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கடிதம்

மைசூரு: 'முடா' வழக்கு விசாரணையில் பாரபட்சமாக செயல்படுவதாக அமலாக்கத் துறை மீது புகார் தெரிவித்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருப்பதாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமண் கூறியுள்ளார்.

மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 'முடா' சார்பில் வழங்கப்பட்ட 14 வீட்டுமனைகள் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதை 'முடா'வும் பெற்றுக் கொண்டது.நிலைமை இப்படி இருக்கும்போது, அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் சித்தராமையா பெயரை குறிப்பிட்டு இருப்பது சரியா? 300 கோடி ரூபாய் மதிப்பிலான 142 சொத்துகளை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. முடக்கப்பட்ட சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். விசாரணை நடக்கும்போதே அறிக்கை வெளியிட்டது ஏன்?பாரபட்சமாக செயல்படும் அமலாக்கத் துறைக்கு எதிராக, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். முதல்வர் மனைவி திரும்பி அளித்த வீட்டுமனைகளின் மதிப்பு 56 கோடி ரூபாய் என்று அமலாக்கத்துறை கூறுகிறது. எங்கு அமர்ந்து அமலாக்கத்துறை கணக்குப் போட்டது?

97 மனைகள்

'முடா'வில் முறைகேடாக ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 97 மனைகள் பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களுக்கு சொந்தமானது. இதுபற்றி அமலாக்கத்துறை முதலில் விசாரிக்கட்டும். முதல்வர் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி குறித்து மக்களிடம் தவறான தகவல் பரப்ப வேண்டும் என்ற நோக்கில் அமலாக்கத்துறை செயல்படுகிறது.முந்தைய பாஜ., ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து, எங்கள் அரசு விசாரிப்பதால் எங்களுக்கு 'செக்மேட்' வைக்க பார்க்கின்றனர். பா.ஜ.,வில் நிலவும் உட்கட்சி பிரச்னையை திசைதிருப்ப 'முடா' வழக்கை கையில் எடுத்துள்ளனர்.சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணாவிடம் நான் கேட்கிறேன். வழக்கை நடத்த உங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது 25 லட்சம் ரூபாய் செலவு ஆகும். இந்த பணத்தை உங்களுக்கு தருவது யார் என்று சொல்லுங்கள்.சிநேகமயி கிருஷ்ணா மீது அமலாக்கத் துறையிடம் நாங்கள் புகார் செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படுவது இல்லை. ஆனால் அவர் காலையில் புகார் அளித்தால் மாலையில் வழக்குப்பதிவு செய்கின்றனர்.அமைச்சர் லட்சுமியின் கார் விபத்தில் சிக்கியதை, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி விமர்சித்துள்ளார். அந்த காரில் கட்டு, கட்டாக பணம் இருந்ததாக கூறுகிறார். உங்களிடம் உறுதியான தகவல் இருந்தால் அமலாக்கத் துறையிடம் புகார் செய்யுங்கள்.துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்துவிட்டு வெளியே வந்த பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத், முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து பேசுகிறார். இதன் நோக்கம் முதல்வர், துணை முதல்வர் இடையே சண்டையை ஏற்படுத்துவது. தயவு செய்து அவரை யாரும் பக்கத்தில் சேர்க்க வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை