வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தண்டச் செலவு..,ஓன்றும் பிரயோசனம் இல்லை
கேவலம்,உன் அப்பன் பணத்தையும் கொடுக்கிறாய்,நாசமாக்காதீங்க ,ஆட்சிக்கு வர்றதுக்கு கேவலமா நடந்துக்குறீங்க
நமதென்ன போறது? மக்கள் வரிப்பணம்தானே?
பெங்களூரு : ''அடுத்த முறையும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 'கிரஹ லட்சுமி' திட்டத்தின் உதவி தொகை, 2,000 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயாக உயர்த்தப்படும்,'' என குனிகல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத், சட்டசபையில் தெரிவித்தார்.கர்நாடக சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று, நேற்று அவர் பேசியதாவது:கிரஹ லட்சுமி திட்டத்தால், என்ன மாற்றங்கள் ஏற்பட்டது என, சிலர் கேள்வி கேட்கின்றனர். ஏழைகளுக்கு ஆண்டு தோறும் 24,000 ரூபாய் கிடைத்தால், அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். கிரஹ லட்சுமி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால், மக்களின் சாபம் அவர்களை சும்மா விடாது.அடுத்த முறை அரசு மாறினாலும், வாக்குறுதி திட்டங்களை நிறுத்த முடியாது. 2028ல் மீண்டும் எங்கள் அரசு அமைந்தால், கிரஹ லட்சுமி திட்டத்தின் உதவி தொகை, 2,000 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயாக உயர்த்துவோம்.மக்கள் தொகை அடிப்படையில், தொகுதிகளை மறு சீராய்வு செய்வது சரியல்ல. மத்திய அரசின் குடும்ப நல திட்டம், தென் மாநிலங்களில் கண்டிப்புடன் செயல்படுத்தப்பட்டது. இதனால், மக்கள் தொகை கட்டுக்குள் வந்தது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்; உத்தரபிரதேசம், பீஹார் மாநிலங்களுக்கு லாபமாக இருக்கும். எனவே, மக்கள் தொகை அடிப்படையில், தொகுதிகளை வரையறை செய்யக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.
தண்டச் செலவு..,ஓன்றும் பிரயோசனம் இல்லை
கேவலம்,உன் அப்பன் பணத்தையும் கொடுக்கிறாய்,நாசமாக்காதீங்க ,ஆட்சிக்கு வர்றதுக்கு கேவலமா நடந்துக்குறீங்க
நமதென்ன போறது? மக்கள் வரிப்பணம்தானே?