உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீசாருடன் காங்., கட்சியினர் உ.பி.,யில் மோதல்

போலீசாருடன் காங்., கட்சியினர் உ.பி.,யில் மோதல்

லக்னோ, டஉத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தின் சந்தவுசி என்ற இடத்தில், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஜமா மசூதி உள்ளது. ஹிந்து கோவிலை இடித்து இந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது.அதிகாரிகள் ஆய்வு நடத்த வந்த போது, பாதுகாப்பு படையினரை நோக்கி ஒரு தரப்பினர் கற்களை வீசி தாக்கினர். இந்த மோதல் வன்முறையாக மாறியதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர். சம்பல் மாவட்டத்தில் பதற்றம் நீடிப்பதால், வரும் 10 வரை வெளியாட்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்துக்கு சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்ய, உ.பி., - காங்., தலைவர் அஜய் ராய் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் நேற்று முடிவு செய்தனர்.இதையறிந்த போலீசார், தலைநகர் லக்னோவின் மால் அவென்யூ பகுதியில் உள்ள காங்., தலைமை அலுவலகத்துக்கு வெளியே தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர். மேலும், மாநில காங்., தலைவர் அஜய் ராய் உட்பட பல நிர்வாகிகளின் வீடுகளுக்கு வெளியேயும் தடுப்புகளை போலீசார் அமைத்திருந்தனர்.காங்., தலைமை அலுவலகத்தில் இருந்து, அஜய் ராய் தலைமையில், 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், சம்பல் மாவட்டத்துக்கு நேற்று புறப்பட்டனர். தடுப்புகளை உடைத்து வந்த அவர்களை, சிறிது துாரத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.இருதரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை