உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் முன்னுரிமை: பா.ஜ., அடுத்த வீடியோ ரிலீஸ்

முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் முன்னுரிமை: பா.ஜ., அடுத்த வீடியோ ரிலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2009ல் பேசிய மற்றொரு 'வீடியோ'வை வெளியிட்டு, காங்., மீதான தாக்குதலை பா.ஜ., தீவிரப்படுத்தி உள்ளது.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், எஸ்.சி., - எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுகீட்டை பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க காங்., திட்டமிட்டுள்ளதாகவும் பா.ஜ., குற்றம் சாட்டி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3ihkvnql&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நிரூபணம்

இது தொடர்பாக, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பேசிய வீடியோ ஒன்றை, சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் 2009ல் பேசிய மற்றொரு வீடியோவை பா.ஜ., தற்போது வெளியிட்டுள்ளது.அதில் அவர் பேசியுள்ளதாவது: சிறுபான்மையினருக்கு, குறிப்பாக ஏழை முஸ்லிம்களுக்கு நம் நாட்டின் வளங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நாட்டின் வளங்கள் என்று வரும்போது, அதன் முதல் உரிமை முஸ்லிம்களுக்கே உள்ளன. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.'முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிப்பது காங்கிரஸ் கட்சியின் தெளிவான கொள்கை என, நாங்கள் கூறியது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது.'இடஒதுக்கீடு முதல், நாட்டின் வளங்கள் வரை, அனைத்திலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்கும் காங்கிரஸ் மனநிலைக்கு, இது மிக சிறந்த உதாரணம்' என, பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.இது குறித்து பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாவது: எஸ்.சி., - எஸ்.டி., உள்ளிட்ட பட்டியலினத்தவர், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் இடஒதுக்கீட்டை பறித்து, அதை முஸ்லிம்களுக்கு வழங்குவதே காங்., மற்றும், 'இண்டியா' கூட்டணியினரின் மறைமுக கொள்கை.நாட்டின் வளங்கள் மீதான முதல் உரிமை முஸ்லிம்களுக்கே என, காங்., கூறுகிறது. அது ஏழைகளுக்கு சொந்தமானது என, பிரதமர் மோடி கூறுகிறார். கடந்த 2009ல் மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், முன்னாள் பிரதமர் மன்மோகன் இதை கூறியுள்ளார்.

வலியுறுத்தல்

அதை வாய் தவறி அவர் கூறவில்லை. வேண்டுமென்றே, திட்டமிட்டு தன் கருத்தை வலியுறுத்தி உள்ளார். சச்சார் கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில், தலித்களை விட முஸ்லிம்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாக, பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, முஸ்லிம்களை எஸ்.சி., பிரிவில் சேர்க்கவும், அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை முஸ்லிம்களுக்கு வழங்கவும் காங்., அடித்தளத்தை அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Dharmavaan
ஏப் 30, 2024 08:10

உண்மை இந்துக்களுக்கு தெரிய வேண்டும் இந்த இண்டி பாதகர்கள் ஹிந்து மதத்தை அழித்து விட முயல்கிறார்கள்


MADHAVAN
ஏப் 29, 2024 17:02

மக்களுக்கு புரியவைக்குறாரு


MADHAVAN
ஏப் 29, 2024 17:01

யாரும் நினைக்கவில்லை


abdulrahim
ஏப் 29, 2024 13:32

இப்படி ஒரு மதவாத பிரதமரை உலகம் கண்டதில்லை


abdulrahim
ஏப் 29, 2024 13:30

தோழ்வி பயத்துல....


madhavan rajan
ஏப் 28, 2024 15:04

காங்கிரஸ் செய்வதை மோசமான அரசியல் என்று கூறுகிறார்


Dharmavaan
ஏப் 28, 2024 07:15

சச்சர் கமிட்டீ ரிப்போர்ட் போல பிஜேபி ஏன் தயாரிக்க கூடாது ஹிந்துக்களுக்கு ஆதரவாக


madhavan rajan
ஏப் 28, 2024 15:07

பாஜக எப்போதும் அனைவருக்கும் பொதுவானத்தைத் ஹான் செய்யும் ஆனால் அதை மத்ஸசார்பானது என்று கூறுவார் காங்கிரசும் மற்ற எதிர்க்கட்சிகளும் முஸ்லீம் மதத்தை தாங்கோ தாங்கு என்று தாங்கிவிட்டு மதச்சார்பற்றவர்கள் என்று தாங்களே சொல்லிக்கொள்வார்கள்


Dharmavaan
ஏப் 28, 2024 07:13

காங்கிரஸின் தலையே முஸ்லீம் ராகுல்கான் எப்படி இருக்கும் naattai பிரிவினை செய்த பிறகு முஸ்லிம்களை இங்கு தங்கவிட்டது காந்தி நேரு ஹிந்துக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்


venugopal s
ஏப் 27, 2024 15:51

மிகவும் மோசமான அரசியல் செய்கிறது.


Dharmavaan
ஏப் 28, 2024 07:16

உண்மையை சொல்வது மோசமான அரசியலா hindukkalai ஏமாற்றி முஸ்லிம்களுக்கு கொடுப்பததுதான் நேர்மையான அரசியலா துரோகி


தமிழ்வேள்
ஏப் 27, 2024 14:57

பாஜக தவிர்த்த எதிர்க்கட்சிகள் அனைவரும் , அவர்கள் அளவில் அவுரங்கசீப்புகளே இவர்களுக்கு அதிகாரம் மட்டும் கிடைத்தால் , பத்து நூர் மடங்கு கொடுமை செய்யும் இயல்புடையவர்கள் திருட்டு திமுக திரிணாமுல் கும்பல் இந்த நாட்டுக்கு நல்லது


shyamnats
ஏப் 28, 2024 10:31

மிக சரியாக சொன்னீர்கள் எதிர் கட்சிகளின் தேர்தல் பரப்புரை என்ன? ஒன்றாக கூடி மோடியை எதிர்ப்போம் என்பது மட்டும்தானே காண்கிறார் செய்த பல இந்துக்களுக்கு எதிரான தவறுகளை திருத்த மோடிஜி மூன்றாவது மட்டுமல்ல நான்காவது முறையும் பிரதமராக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்


மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி