உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இட ஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து காங்., போராடும்: கார்கே

இட ஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து காங்., போராடும்: கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: ''பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடும்,'' என அக்கட்சி தலைவர் கார்கே கூறியுள்ளார்.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த மாநாட்டில் கார்கே பேசுகையில், பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை தவறானது. அது எதிரிகளை உருவாக்குகிறது. பிரதமர் இதுவரை 42 வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார். ஆனால், மக்கள் இறந்து கொண்டிருக்கும் மணிப்பூர் மாநிலத்திற்கு இதுவரை செல்லவில்லை.பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, சமூக கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார ரீதியிலான ஜாதிவாரி கணக்கெடுப்பை தெலுங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு செய்து வருகிறது. இது ஒட்டு மொத்த நாட்டிற்கும் உதாரணமாக மாறி உள்ளது.ஹைதராபாத்தில் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது.பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என மக்கள் கேட்கின்றனர். ஆனால், எங்கிருந்து 42 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வர முடியும். அதற்கு ஒப்புதல் கிடைக்குமா?பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடும். அரசியல் சாசனத்தில் இருந்து மதசார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றை நீக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

MARUTHU PANDIAR
ஜூலை 05, 2025 14:05

கார்கே வீட்டு போர்டிகோவில் எத்தினி காருங்க இக்குதுனு மக்கள் கேக்கறாங்க.அத்தோடு இவுரு எளிய பிரிவினர் வேறயாம். அரசியல் தவிர வேற பரம்பரை பிசினெஸ்ஸு ,அல்லது பாட்டன் பூட்டன் சொத்து உண்டா இந்த மகா கோடீஸ்வரருக்க்கூன்னும் கேக்கறாங்க.


ஆரூர் ரங்
ஜூலை 05, 2025 12:22

தலைவர் பதவியில் இருந்து கொண்டே மேலிடம் முடிவெடுக்கும் என்று பேசுகிறீர்களே. இதுதான் இடஒதுக்கீடின் பலன்.


vadivelu
ஜூலை 05, 2025 06:33

ஆட்சியில் அறுபது ஆண்டுகள் இருந்தும் இட ஒதுக்கீட்டுக்கு போராடத்தான் போறீங்களா. எதிர் கட்சஜிஹியாக இருக்கும் பொது மட்டும் உங்களுக்கு நினைவுக்கு வருவது இது போல பல


PRS
ஜூலை 05, 2025 03:23

எல்லாம் சரி கார்கே. நீ எவ்வளவு சொத்து வைச்சிருக்க. உண்மையை சொல்லு. அப்பறமா இட ஒதுக்கீட்டு பேசலாம். உன் கட்சி நாட்டை கொள்ளை அடிக்கிறீங்க.


MARUTHU PANDIAR
ஜூலை 05, 2025 01:46

உங்க தலைவர் வெளி நாட்டுக்கு ,பட்டாயா போன்ற இடங்களுக்கு சென்று நாட்டின் வளர்ச்சியை அசுர வேகத்தில் செல்ல பலவகை தோடு ரெம்ப ரெம்ப பெரிய திட்டத்தோடு போயிட்டிருக்காரு. மணிப்பூருக்கு பிரதமர் செல்லாமல் உங்க தலைவரைப் போல பெரிய்ய்ய திட்டத்தோடு செல்ல வில்லைன்னு சொல்ல வாரீங்களா?


M Ramachandran
ஜூலை 05, 2025 01:21

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை தலைவரெ முதலில் நீங்கள் இருக்கும் கட்சியில் ஒதுக்கீடு செய்ய உங்களுக்கு உரிமை உள்ளதா என்று சொல்லுங்க .


M Ramachandran
ஜூலை 05, 2025 00:03

கார்க்கெ வயது முபகாரணம் சொல்லி அரசிளலிருந்து ஒதுங்கி விடுவது நலம். தற்சமயம் என்னகு பார்த்தாலும் பங்காளி சண்டைய் அண்ணா தம்பிசண்டைய்ய் அன்னான் தங்கை சண்டை நடந்து கொண்டிருப்பதால் வம்பு உங்கமீது வந்து விடியும். வயதான காலத்தில் குடும்பத்துடன் பேரன் பேத்தி யுடன் நிம்மதியாக காலம் கழியுங்க. அது தான் ஹாப்பி ரிடைர்மென்ட். வேண்டாம் பொல்லாப்பு.


M Ramachandran
ஜூலை 04, 2025 23:55

ஒட்டு பொறுக்க திருட்டு பெயரில் உலா வரும் யேமாற்று பேர்வழி. ஹிந்துக்கள் கவனமாக இருக்க வேண்டிய தருணம். ஹிந்து மத விரோதிகள் நாடக மாடுவதில் திறமைய்ய சாலிகள்


தாமரை மலர்கிறது
ஜூலை 04, 2025 23:13

அந்த ஆணியே புடுங்க வேணாம்.


Ramesh Sargam
ஜூலை 04, 2025 22:57

ஒருவர் மீது அதிக அக்கறையும் காட்டாதீர்கள். அதேபோல அதிக அன்பும் வைக்காதீர்கள். உங்களுக்கு இருக்கும் மரியாதை கெடும்.


முக்கிய வீடியோ