உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது: சோனியா வீடியோ வெளியீடு

காங்கிரசின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது: சோனியா வீடியோ வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரசின் கரம் என்றும் உங்களுடன் (பெண்கள்) உள்ளது என சமூகவலைதளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வீடியோ வெளியிட்டுள்ளார்.இது குறித்து வீடியோவில் சோனியா பேசியதாவது: கடுமையான பணவீக்கத்திற்கு மத்தியில் நமது பெண்கள் நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளனர். பெண்களின் கடின உழைப்புக்கும், தவத்துக்கும் நீதி கிடைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிரசின் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் தரப்படும்.

இந்தியர்களுக்கு அதிகாரம்

இந்த உத்தரவாதங்கள் ஏற்கனவே கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளன. காங்கிரசின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது. காங்கிரஸ் கட்சி தனது திட்டங்கள் மூலம் இந்தியர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. சுதந்திரப் போராட்டம் முதல் நவீன இந்தியாவை உருவாக்குவது வரை பெண்கள் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
மே 13, 2024 14:46

ஒன்பதாயிரம் சீக்கியர்கள் மற்றும் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை சுவர்க்கத்துக்கு அனுப்பிய கருணை மிக்க கரங்கள்.


Ramanujadasan
மே 13, 2024 16:25

திமுக இல்லையேல் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை சுவர்க்கத்துக்கு அனுப்பி இருக்க முடியுமா ?


Sivasankaran Kannan
மே 13, 2024 13:55

உங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்தை அந்த கை திருடாமல் ஜாக்கிரதையாக இருங்கள்


GoK
மே 13, 2024 13:46

உண்மையை சொல்லியிருக்கிறார் காங்கிரஸின் கரம் எப்பவும் உங்களோட பாக்கெட்டிலதான், உஷாரா இருங்க


Lion Drsekar
மே 13, 2024 13:44

பாவம் வாக்காளர்கள் இந்த வார்த்தையின் பொருள், வாக்களிக்கும் கரங்கள் உங்களிடத்தில் உள்ளது ஏனறு கூறியிருக்கிறார் வாக்கெல்லாம் எங்களுக்கு பதவி எல்லாம் எங்களுக்கு, வந்தே மாதரம்


venkatapathy
மே 13, 2024 13:43

புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார் மஹாராஷ்டிரத்திலும் தெலுங்கானாவில் லட்சம் பெற்றவர்கள் எத்தனை பேர் எங்கே கொடுக்கிறார்கள்


M Ramachandran
மே 13, 2024 13:15

காங்கிரிஸின் கை அணைக்கும் கை அல்ல ஜாக்கிரதை அடிக்கும் கை நிதானம் Caution தேவை


Ramanujadasan
மே 13, 2024 12:56

ஆமாம் , உங்கள் சொத்துக்களை கொள்ளை அடிக்க ஜாக்கிரதை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை