உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலை கொல்ல சதி!

கெஜ்ரிவாலை கொல்ல சதி!

அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது பா.ஜ.,வினர் தாக்குதல் நடத்தினர். அவரை கொல்ல ரவுடிகளையும், குண்டர்களையும் பா.ஜ., அனுப்பி வைத்துஉள்ளது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு, பா.ஜ., நிர்வாகிகளுடன் தொடர்பு உள்ளது. - ஆதிஷி, டில்லி முதல்வர், ஆம் ஆத்மி

காரை விட்டு மோதினார்!

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார், பா.ஜ., தொண்டர்கள் மீது மோதியது. அவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், கெஜ்ரிவாலை பா.ஜ., வினர் தாக்கியதாக ஆம் ஆத்மி மலிவான அரசியல் செய்கிறது.- பன்சுரி சுவராஜ், லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

தொழில் செய்வது கடினம்!

மத்திய அரசு, நாட்டில் தொழில் செய்வதை எளிதாக்கி வருகிறோம் என கூறி வருகிறது. ஆனால் அதற்கான நடவடிக்கை எடுத்தது போல் தெரியவில்லை. சிக்கலான ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரியால் தொழில் செய்வது இங்கு கடினம் ஆகியுள்ளது. பட்ஜெட்டில் இவற்றை சரி செய்ய வேண்டும்.- ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ