உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி; தெய்வாதீனமாக தடுத்து நிறுத்தம்

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி; தெய்வாதீனமாக தடுத்து நிறுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த சதி ரயில் இன்ஜின் டிரைவரின் முன்னெச்சரிக்கையான நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோட்டில் இருந்து சென்னை வரை இயக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை நேற்று இரவு ஈரோட்டில் இருந்து புறப்பட்ட ரயில், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை கடந்து சென்ற போது தடதடவென சத்தம் கேட்டது. உஷாரான ரயில் இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hwe8zdev&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இறங்கிச் சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரயில் அதே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.ரயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் மர்ம நபர்கள் சதி வேலை செய்திருப்பதை புரிந்து கொண்ட ரயில் என்ஜின் டிரைவர் ரயில்வே அதிகாரிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்தில் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Gopalakrishnan Thiagarajan
ஜூன் 18, 2025 19:25

இத்தகைய கொடூரமான பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் அப்பீல் இல்லாத மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.


Ramesh Sargam
ஜூன் 18, 2025 12:30

இதுபோன்ற சதிகளை செய்பவர்கள் வேலைவெட்டி இல்லாத, டாஸ்மாக் சரக்கு அடித்து, இருநூறுக்கும், பிரியாணிக்கும் அலையும் அரசியல் வாரிசுகள்தான். எல்லோரையும் கையும்களவுமாக பிடித்து சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கவேண்டும். யார் தண்டிப்பார்கள்? போலீஸ். போச்சு, அவர்களே இன்று குற்றம் அதிகம் புரிகிறார்கள். பிறகு யார்தான் தண்டிக்கமுடியும்? நீதிமன்றங்கள். போச்சு, அவர்கள் வெறும் தண்டனைதான் அறிவிப்பார்கள். செயல்படுத்தவேண்டியது மாநில அரசு. மாநில அரசு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துமா? செயல்படுத்தவேண்டும்.


M Ramachandran
ஜூன் 18, 2025 11:33

தமிழ்நாட்டில் முதல்வர் கட்டுப்பாட்டிலுள்ள காவல் துறையை செயலாற்ற குடும்ப நலன் கட்சி நலன் காக்கும் துறையாக மாற்றி விட்டார்கள். 70 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட் லேலண்ட் யார்டு க்கு இணையாக பெயர் பெற்ற தமிழ் நாட்டு காவல் துறையை கட்சி கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர் என்பது வேதனைக்குரிய விஷயம்


A P
ஜூன் 18, 2025 09:58

நீங்கள் வேண்டுமானாலும் பாருங்கள் போலீஸ் இதைப்பற்றி கவலைப்படாமல், குற்றவாளியைப் பிடித்து விட்டோம், அவர் குடி போதையில் இருந்தார், அல்லது மன நோயாளி என்று சொல்லி இவ்வளவு பெரிய ஆபத்தைக் கூட சாதாரணமாக கடந்து விடுவார்கள்.


V RAMASWAMY
ஜூன் 18, 2025 09:25

நம் நாட்டில் வெளியுள்ள விரோத சக்தியைவிட சொந்த நாட்டையே அடகு வைக்கக்கூடிய தேச துரோக விரோத சக்திகள் அதிகமாகிவிட்டன. அதனை அடையாளம் கண்டு நசுக்கவேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடி தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் கொடுக்கவேண்டும். அவர்கள் நாட்டில் உயிரோடிருக்க தேவையில்லை.


சிந்தனை
ஜூன் 18, 2025 09:23

நமக்குத் தெரிந்த எதிரி பாகிஸ்தான் சீனா பங்களாதேஷ் நமக்குத் தெரியாத எதிரிகள் நமக்கு பக்கத்து வீடுகளில் நமக்கு நண்பர்களாக நாம் பொருள் வாங்கும் கடை முதலாளிகளாக...


Parthasarathy Badrinarayanan
ஜூன் 18, 2025 08:00

கடலோடி திருட்டு திராவிடன்


VENKATASUBRAMANIAN
ஜூன் 18, 2025 07:54

இவர்களை நாடு கடத்த வேண்டும். இந்தியாவிற்கு எதிரான யார் செயல்பட்டாலும் நாடு கடத்தப்படவேண்டும். சில அரசியில்வாதிகள் அரசியல் லாபத்திற்காக செயலபடுகிறார்கள்.


Kanns
ஜூன் 18, 2025 07:49

If State Police Biases With State Ruling-Parties, HandOver All Cases to Central/ Opposition Party Police


V T
ஜூன் 18, 2025 07:32

கடலோடி என்ற பெயரில் இருக்கும் தீவிரவாதி. பகள்கமில் நீ ஹிந்துக்களை கொல்லலாம் ஆனால் தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை. நாட்டில் தேவை அற்ற மதத்தினர் இங்கு நமது சோற்றை தின்னுக்கொண்டு நமக்கே துரோகம் செய்கிறார்கள். இவர்களை பாக்கிஸ்தான் அனுப்பி வையுங்கள்.,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை