புதுடில்லி: 'குடிமக்களின் காவலனாக அரசியலமைப்பு சட்டம் உள்ளது' என பார்லி கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசுகையில் தெரிவித்தார்.டில்லியில் பார்லிமென்ட் மைய மண்டபத்தில் இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் அரசியல் சாசன உறுதி மொழி ஏற்று கொண்டனர். அரசியல் சாசன 75வது ஆண்டு நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w0phtnpu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது: நமது சமகால வாழ்க்கையில் நாம் பெற்றுள்ள முன்னேற்ற அறிக்கை தான் அரசியலமைப்பு சட்டம். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம், சமூக நீதி மற்றும் அனைவரும் வளர்ச்சியின் இலக்குகளை அடைந்துள்ளோம். குடிமக்களின் காவலனாக அரசியலமைப்பு சட்டம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், சமூகத்தின் அனைத்து தரப்பினரின், குறிப்பாக நலிந்த பிரிவினரின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.ஏழைகள் சொந்த வீடுகளைப் பெறுகிறார்கள். நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அரசியலமைப்பு சட்டத்தின் படி, அனைத்து குடிமக்களும் தங்களது கடமைகளை செய்ய வேண்டும். 2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய, அனைவரும் உழைக்க வேண்டும். 75 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் இந்த மைய மண்டபத்தில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் மாபெரும் பணி நடைபெற்றது. இவ்வாறு அவர் பேசினார்.பொருளாதார வளர்ச்சி
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது: பொருளாதார வளர்ச்சி, வலுவான உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றால் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜனநாயகத்திற்கான குறிப்பிடத்தக்க சாதனையான அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ஓம் பிர்லா பேச்சு
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதாவது: இன்று இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சியை கொண்டாடும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 75 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாளில், நமது அரசியலமைப்பு சட்டமாக்கப்பட்டது. பிரதமர் மோடியின் உத்வேகத்தால், இந்த மைய மண்டபத்தில் இன்று அரசியலமைப்பு தின கொண்டாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.