ஒப்பந்ததாரர்கள் போராட்டம்
சாஸ்திரிநகர்:நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக்கோரி நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு துறையுடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.சாஸ்திரி நகரில் உள்ள எல்.எம்., பந்த் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தின்போது, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தொகையை வழங்காமல் புதிய பணிகளை செய்யும்படி தாங்கள் நிர்பந்திக்கப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.போராட்டத்திற்கு டில்லி பிராந்திய ஒப்பந்ததாரர்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் அருண் சர்மா தலைமை தாங்கினார். துறை ரீதியான பணிகளை முடித்த போதிலும், 24 மாதங்களுக்கும் மேலாக நிதி வழங்கப்படவில்லை என, போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.