உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு: உதயநிதி மனுவுக்கு பதிலளிக்க உச்சநீதிமன்றம் மாநிலங்களுக்கு நோட்டீஸ்

சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு: உதயநிதி மனுவுக்கு பதிலளிக்க உச்சநீதிமன்றம் மாநிலங்களுக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்கை ஒரே வழக்காக தொகுத்து விசாரிக்க வேண்டும் எனக்கூறி தமிழக அமைச்சர் உதயநிதி தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்கும்படி பல்வேறு மாநில அரசுகளுக்கும், அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பரில், சென்னையில் நடந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, ‛மலேரியா, டெங்கு நோய்கள் போல், சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் ' என்றார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. உதயநிதியின் பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, உதயநிதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‛‛ அனைத்து மாநிலங்களிலும் தொடுக்கப்பட்ட வழக்குகளை தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும்'' எனக்கூறப்பட்டு இருந்தது.இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உதயநிதியின் கோரிக்கை குறித்து பதிலளிக்கும்படி பல்வேறு மாநில அரசுகள் மற்றும் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், முந்தைய விசாரணையின் போது, சட்டப்பிரிவு 32ன் கீழ் உதயநிதி மனு தாக்கல் செய்ததற்கு ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள், சிஆர்பிசி 406( வழக்குகளை மாற்றும் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம் குறித்த பிரிவு) ன் கீழ் மனு தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி இருந்தனர். இதன்படி, உதயநிதி தரப்பில் திருத்தம் செய்யப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

N Maheswaran
மே 13, 2024 21:13

ஆனால், அதற்கு வடக்கே உள்ள , சதுர கிமீ, பரப்புள்ள பகுதி, ஆசாதி காஷ்மீர் என்ற பெயரில் தனி பகுதி யாகச் செயல்பட முடிவு செய்தது வரலாறு தெரியாதா?? அப்பகுதி பாகிஸ்தானால் படை எடுத்து க கைப்பற்றியது


rsudarsan lic
மே 13, 2024 13:13

காதலிக்க நேரமில்லை வசனம் பேர் என்னய்யா பேர்? யாருக்கும் தெரியாத பேர் இப்போ எல்லா ஸ்டேட்லயும் தெரிஞ்சிருக்கு


rsudarsan lic
மே 13, 2024 13:09

ஒரு பாதிரியார் அல்லது ஒரு மௌல்வி ஹிந்து மதத்தை விமர்சித்தால் தண்டனை உண்டா? அதுபோலவே இந்த பதவியில் உள்ள கிறிஸ்தவன் பேசியதற்கு தண்டனை அல்லது மன்னிப்பு கொடுத்து விடுங்கள் இன்றே இப்பொழுதே


Sridhar
மே 13, 2024 12:37

இதெல்லாம் நேரத்தை கடத்துவதற்கான டெக்னீக் இப்படியே ஊறப்போட்டு எல்லாரும் மறக்கற வரை வாய்தா கொடுத்துக்கிட்டே இருப்பானுங்க இந்த மாதிரி அநாகரீகமான பேசுற பயல்களுக்கு பேசுன மறுநாளே தண்டனை கொடுத்து, அந்த தண்டனையின் கொடூரத்தை பார்த்த எவனும் இன்னொருமுறை அந்தமாதிரி பேச அஞ்சும் நிலை என்று ஏற்படுகிறதோ, அன்றுதான் இந்தியா உருப்படும்


Mohan
மே 13, 2024 09:20

சனாதனம் குறித்து அவதூறு பேசிய அமைச்சர் ஒரு மதம் மாறிய கிறிஸ்தவர் கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்த நபர் அவதூறு பேசிய அமைச்சருக்கு தான் சாராத மதத்தின் கருத்து புரியாது அப்படி அவதூறு பேசுவது மதச்சார்பு அசிங்கம், கடைந்தெடுத்த கிரிமினல்தனம் இதை கண்டித்து நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் உச்ச நீதி மன்றம் பாகிஸ்தானுக்கு சிறப்பு அந்தஸ்தில் போகலாம்


Ethiraj
மே 13, 2024 07:40

Minister declaring himself as christian unnecessarily comments on Hindu ure to please HRCE minister in a public meeting Knowingly Well that majority of population is hindus in India is a clear indication that he is least bothered about society


Thayumanavan Kumar
மே 13, 2024 06:57

ராமசாமி வாசுதேவன் அவர்களின் கருத்து சரியே


Chandrasekaran s
மே 12, 2024 20:49

He has to go to all states to understand the sentiments of all indians


Dharmavaan
மே 12, 2024 14:49

கேவலமான நீதி நோகாமல் அடிக்கும் நாடகம்


Dharmavaan
மே 12, 2024 14:44

ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்றகோரிக்கையு ஏன் கோர்ட் ஏற்றது இதுவே தவறு என்ன என்ன


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை