உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமணத்திற்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்

திருமணத்திற்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்

மும்பை:மஹாராஷ்டிராவில் சமீபத்தில், 'மஹாராஷ்டிரா மத சுதந்திரச் சட்டம் - 2026' நடைமுறைக்கு வந்தது. இது, கட்டாயப்படுத்துதல், மோசடி, வற்புறுத்தல், துாண்டுதல், தவறான சித்தரிப்பு, திருமணம் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் மதமாற்றங்களை குற்றமாக கருதுகிறது. இந்தச் சட்டத்தின் பிரிவு 6-ன் படி, மதம் மாறும் முன் தனிநபர்கள், 60 நாட்களுக்கு முன்பாக அறிவிக்க வேண்டும்.இந்நிலையில், தானேவைச் சேர்ந்த 70 வயது முஸ்லிம் மத போதகர், இச்சட்டத்தை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மகேஷ் சி.திரிபாதி, நீதிபதி அத்வைத் சேத்னா விசாரித்தனர்.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தச் சட்டம், அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மதத்தை பரப்புவதற்கான சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக வாதிட்டார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'இந்தச் சட்டம், சமூகத்தின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கவும், கட்டாயப்படுத்துதல் மூலம் மேற்கொள்ளப்படும் மதமாற்றங்களை தடுக்கவும் கொண்டு வரப்பட்டது. 'எவருக்கும், தங்கள் மதத்தை மாற்றிக்கொள்ள முழு சுதந்திரம் உண்டு. ஆனால், திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது' என, சுட்டிக்காட்டினர்.இதையடுத்து, மனு திரும்ப பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

சந்திரசேகர்
அக் 23, 2026 18:37

அடுத்த மதத்து பெண்களை திருமணம் செய்ய வேண்டுமென்றால் மணமகனோ அல்லது மணப் பெண்ணோ அவங்க மதத்துக்கு மாறினால் தான் திருமணம் நடக்கும். ஆனால் அவங்க யாரும் நம்ம மதத்துக்கு மதம் மாற மாட்டார்கள். காமத்திற்கு சாதியும் இல்லை மதமும் இல்லை


S.kausalya
அக் 23, 2026 16:24

அப்ப பணம்,,மற்றும் சோத்துக்காக மதம் மாற்றலாமா மை லார்ட்? மதம் மாறியதை மறைத்து அரசு சலுகை பெறுபவர்களை என்ன செய்ய போகிறீர்கள் மை லார்ட்


jss
அக் 24, 2026 05:35

நன்றாக கேளுங்கள். மைலார்ட் இதற்கு பதில் கூறமாட்டார்


Subash BV
அக் 23, 2026 14:06

Only guilty concious guys will oppose such laws. THEY ARE THE RELIGIOUS CONVERTERS.. BE ALERT WITH THEM. STAY IN YOUR RELIGION FIRMLY, HAVE FAITH. DONT GET YOURSELF SOLD FOR SOME NONSENSE.


Tamilarasu Kandasamy
அக் 23, 2026 09:44

அம்மா கிறிஸ்டியன் ,பையன் ப்ராமின் அப்படின்னு சொல்லிட்டு, நாட்டிற்கு துரோகம் செய்திட்டு இருக்காரே ஒருத்தன், அவரை என்ன செய்யலாமுன்னு கொஞ்சம் சொல்லுங்க கணம் கோர்ட் நீதிபதி அவர்களே .


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2026 09:14

இதற்கே கேசு போடுறாங்க ..... ஹிந்துக்கள் தங்கள் எண்ணிக்கையில் குறைஞ்சா என்ன ஆகும்ன்னு நினைச்சுப் பாருங்க ..... அப்புறம் கனவுல கூட மதமெனப்பிரிந்தது போதும் ன்னு கூவிக்கிட்டு வர்ற பச்சை பூமர்ஸைக் கட்டிப்பிடிக்க மாட்டீங்க .....


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2026 09:12

உன் மதம் உனக்கு .... என் மதம் எனக்கு ..... இப்படிச் சொல்லும் மதம் வெளியேறுபவர்களைத் திட்டித் தீர்ப்பது ஏன் >> சிலர் கொல்லப்படுவது ஏன் >>


Modisha
அக் 23, 2026 08:15

என்ன செய்ய. அந்த மதத்து சாமி மட்டும் தான் உடனே ‘ கேன்சர் கட்டி’ யை உடனே கறைக்கிறாராம் .


RJ
அக் 23, 2026 07:33

ஏய் பாவிகளே காசுக்காக மதம் மாற்றும் தொழில் செய்யும் வெட்கம் இல்லாத கூட்டமே. காசுக்காக 50000 வருடத்திற்கும் மேலாக இருந்த உங்கள் இந்து மதத்தை விட்டு, பொய் சொல்லி காசு கொடுத்து மதம் மாற்றும் கும்பலிடம் ஏமாறும் பாவிகளே. மதம் மாறிய பின் உங்கள் ஒட்டுமொத்த வரலாறும் அறுந்து போகிறது. காசுக்காக மதம் மாற்றாதீர்கள். இவர்கள் வந்தால் விழித்து கொள்ளுங்கள். அடையாளம் கண்டுபிடிக்கவேண்டும். ஏன் எனில், ஹிந்து பெயரை வைத்து கொண்டே கிறித்துவராக இருந்து நம்மை இழிவாக பேசி பொய் சொல்லி காசுக்காக ஏமாற்றுகிறார்கள்


K Karayaan
அக் 23, 2026 11:02

காசு கொடுத்தா நீ மதம் மாறிவிடுவாயா என்ன?. எதையாவது பேத்த கூடாது. மதத்தை யார் மீதும் திணிக்க முடியாது. மனம் வைத்தால் தவிர யாராலும் மதம் மாற்ற முடியாது.


Ganesun Iyer
அக் 23, 2026 16:17

கரையானுக்கு முழு நேர வேலையே இதுதான் போல.. இந்து மதத்தை அரிக்கும் கரையான்கள்..


S.kausalya
அக் 23, 2026 18:19

இந்து கடவுளை கேவலமாக பேசி கொண்டு இருப்பவர்கள்.இந்துக்களின் .திருவிழாவின் போது கடை போட்டு.வியாபாரம். அடுத்து எங்கே.என்று கேட்டு அலைந்து கொண்டு இந்து கடவுளை திட்டுகிறார்கள்.இவர்களை என்ன செய்யலாம். இவர்கள் எதற்க்காக இந்து கடவுளின் திருவிழாவில் கடை போட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்.


jss
அக் 24, 2026 05:42

படிக்காத பாமரனுக்கும் பரம ஏழைக்கும் பணம் கிடைத்தால் போதும் மதம் என்ன பெரிய மதம். இன்னைக்கு இந்த மதம் நாளக்கு இன்னொன்று் மனம் ஒப்பி மாறுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம.


உண்மை பேசு
அக் 23, 2026 07:20

எல்லா நாடுகளின் நில எல்லைகள் முக்கிய மூன்று காரணங்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது. மதம், மொழி, இனம். இதில் மதம் மிக மிக சக்தி வாய்ந்ததாக உள்ளது. மொழியின் மீதான பற்று மதத்தின் முன்னால் தோற்றுபோகிறது பெரும்பாலும்.... எடுத்துக்காட்டாக இன்று பாகிஸ்தானிய ஆபத்து மதத்தால் வந்தது.....காஷ்மீரில் நடக்கும் பிரிவினைவாதம். ஒரே இனம் மற்றும் மொழியை கொண்ட காஷ்மீர் இந்துக்கள் சொந்த நாட்டையும் வீட்டையும் விட்டு ஓட நேர்ந்தது.......இவையெல்லாம் அறிந்தவர்கள் மதமாற்றத்தை தேசிய ஆபத்தாக பார்க்கிறார்கள்.......நீங்கள் எப்படி ?? உங்களுடைய குழந்தைகளுக்கு சொல்லி வளருங்கள் என்மதம் மட்டுமே எனக்கு சம்மதம்.....மதசார்பற்ற என்ற வார்த்தை நமக்கு ஆபத்து


jss
அக் 24, 2026 05:47

முற்றிலும் உண்மை. secularism நாட்டுக்கு கேடு. தற்போதைய பிரானஸ் நிலை எடுத்துக்காட்டு.ஆனால் மதச்சார்பின்மை பேசி கோடீஸவரன் ஆகலாம் உதாரணம் திமுக, காங்கிரஸ்


Ram
அக் 23, 2026 06:56

இந்தமாதிரியான நடமாடும் தீவிரவாதிகளை கண்காணித்து கட்டுப்படுத்தனும்


புதிய வீடியோ