மேலும் செய்திகள்
பாலாற்று மணலில் பதுக்கிய 101 கிலோ கஞ்சா பறிமுதல்
04-May-2025
காஷ்மீர்கேட்:கஞ்சா பறிமுதல் வழக்கில் ஆறு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை ஹரியானாவில் டில்லி போலீசார் கைது செய்தனர்.காஷ்மீர் கேட் அருகே 500 கிலோ கஞ்சாவை ஏற்றிச் சென்ற லாரியுடன் மூன்று பேரை 2019ம் ஆண்டு போலீசார் பிடித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஜமீல் அகமது, 40, என்பவரை போலீசார் தேடி வந்தனர்.தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 8ம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள பினாங்வான் கிராமத்திற்கு ஜமீல் அகமது வருவதாக டில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவரை கைது செய்தனர். டில்லியில் இருந்து தப்பி மும்பைக்குச் சென்ற ஜமீல், அங்கு திரைப்பட நகரில் ஈவன்ட் மேனேஜராக பணியாற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
04-May-2025