உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர்களுக்கு குக்கர்: ம.ஜ.த., புகார்

வாக்காளர்களுக்கு குக்கர்: ம.ஜ.த., புகார்

ராம்நகர், : வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று காங்கிரசார் குக்கர் வினியோகம் செய்வதாக, தாசில்தாரிடம் ம.ஜ.த.,வினர் புகார் செய்து உள்ளனர்.தேர்தல் விதிகள் அமலான பின், போலீசார் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.காங்கிரசுக்கும், குக்கருக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் கூட, வாக்காளர்களுக்கு குக்கர் வழங்கப்பட்டது.லோக்சபா தேர்தலிலும் அதை தொடர்கின்றனர். ஹரோஹள்ளியின் மெஹலவாடி கிராமத்தில், நேற்று முன்தினம் வாக்காளர்களுக்கு வழங்க, குக்கர் கொண்டு செல்லப்படுவதாக, ம.ஜ.த.,வினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அங்கு காத்திருந்த ம.ஜ.த.,வினர், குறிப்பிட்ட வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், காங்கிரஸ் எம்.பி., சுரேஷ், எம்.எல்.ஏ., இக்பால் உசேன் ஆகியோரின் படங்கள் ஒட்டப்பட்டிருந்த குக்கர் பெட்டிகள் இருந்தன.உடனடியாக தாசில்தாருக்கு புகார் செய்து, 'சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்