உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாரடைப்பு மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல

மாரடைப்பு மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மாரடைப்பால் இறந்தவர்களுக்கும், கொரோனா தடுப்பூசிகளுக்கும் தொடர்பு இல்லை' என, சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.கர்நாடக மாநிலம் ஹாசனில், இளம் வயதினர் அடுத்தடுத்து மாரடைப்பில் இறந்தனர். இது பற்றி கருத்து தெரிவித்த மாநில முதல்வரான சித்தராமையா, “சமீபத்திய மாரடைப்பு மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு உள்ளது.''முறையாக சோதனை செய்யப்படாமல் தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததே மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம்,” என்றார்.கொரோனா தொற்று காலத்தில் நம் நாட்டில், 'கோவாக்சின்' மற்றும் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் போடப்பட்டன.இந்நிலையில், 'கோவிஷீல்டு' தடுப்பூசியை தயாரித்த மும்பையின், 'சீரம் இந்தியா' அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:இளம் வயதினர் திடீரென மாரடைப்பில் இறப்பது தொடர்பாக ஆய்வுசெய்த ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எய்ம்ஸ், கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளன.திடீர் இறப்புகளுக்கு இளைஞர்களின் மரபணுக்கள், ஏற்கனவே உள்ள நோய்கள் மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய நோய் தாக்குதல் ஆகியவையே காரணம்.இவ்வாறு குறிப்பிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
ஜூலை 04, 2025 14:15

தடுப்பூசி கம்பெனிகளிடம் கட்டிங் கேட்டு ஏமாந்த ஆந்திரத்தில் புகார்கள் வருகின்றனவா?


ஆரூர் ரங்
ஜூலை 04, 2025 14:13

தினமும் இலட்சக்கணக்கான மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்துகொண்டிருந்ததால் அடிப்படை சோதனைகளை மட்டும் செய்துவிட்டு அவசரகால சிகிச்சையாக அங்கீகரித்து தடுப்பூசி போட்டார்கள். அது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைதான். யாரையும் மிரட்டி கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தவில்லை. (நாட்டு மருந்துகளுக்கும் பல பக்க விளைவுகள் உண்டு). காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால் அன்னிய பிராண்ட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போட்டு நாட்டையே அடகு வைத்திருப்பர். அவை இங்கு வருவதற்குள் நாடே சுடுகாடாக ஆகியிருக்கும்.


Venkatesh
ஜூலை 06, 2025 08:42

தடுப்பூசி போடலேன்னா ரேஷனில் பொருட்கள் தரமுடியான்னு சொன்னதெல்லாம் மிரட்டல் அல்லா .சும்மா ளுள்ளலாலா ..


Venkatesh
ஜூலை 06, 2025 08:48

மருத்துவ துறையில பெருத்த அனுபவம் கொண்ட வெளிநாட்டு கம்பெனியின் மருந்தை வாங்கினா அது ஊழல். அதுவே நேத்து முளைச்ச பூனம் வாலா கிட்ட எந்த அரசியல்வதியும் ஒரு ரூவா கூட வாங்காம அரைகுறையா சோதித்த மருந்தை வாங்குனா அது ஊழல் இல்லை ..நல்லா இருக்குய்யா உங்க ஜூட்ஜுமெண்டு


சிந்தனை
ஜூலை 04, 2025 14:09

இவங்களையெல்லாம் தடுப்பூசி போட்டு காப்பாற்றாமல் விட்டு இருக்க வேண்டும் காப்பாற்றிய தவறு இப்பொழுது யாரோ சொன்ன பொய்களை கேட்டு குற்றம் சுமத்துகிறார்கள்


அப்பாவி
ஜூலை 04, 2025 11:23

நமக்குத் தெரிஞ்ச ஒரே காரணம். நேரு தான். கேஸ் ஓவர்


Venkatesh
ஜூலை 06, 2025 08:39

தட்ஸால் ..


Senthoora
ஜூலை 04, 2025 07:19

கொரோன தடுப்பு ஊசியால் பல ஆடுகள் உடல் உபாதை, மரணம் ஏட்பட்டதை ஒத்துக்கொண்டு, அவர்களுக்கு உரிய மருத்துவம் செய்யப்படுகிறது, சீரம் நிறுவன காப்பீடு காப்பாற்ற இப்போ சீரம் மருந்தால் பாதிப்பு இல்லை என்று வாதம், எட்கெனவே சீரம் மருந்தால் ஆசிய நாடுகளில் பல ஆயிரம் பாதிக்க பட்டு இருக்கிறார்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 04, 2025 14:04

ஆடு மாடுகளுக்கு தடுப்பூசி போடவில்லை. மனிதர்களுக்கு மட்டுமே செலுத்தினர்.


Padmasridharan
ஜூலை 04, 2025 05:38

இதற்கு முன்னாடி மாரடைப்பால் இறந்தவர்கள் எல்லோரயும் கொரோனவால் இறந்தார்கள் என்று அறிவித்தார்களே சாமி


Senthoora
ஜூலை 04, 2025 07:23

சீரம் நிறுவனம் இன்சூரன்ஸ் கொடுக்கணும், அதை காப்பாற்ற சதி.


Kasimani Baskaran
ஜூலை 04, 2025 03:46

காங்கிரஸ் முதல்வர் விஞ்ஞானி என்று ஒருவருக்கும் சொல்லவில்லை..


Senthoora
ஜூலை 04, 2025 07:21

காங்கிரஸ் ஆட்சிமுறையில்தான் நீங்கெல்லாம் படித்து வெளிநாடு போனீங்க.


சமீபத்திய செய்தி